Home | Transcriptions of Videos

Non Surgical EECP : DD Pothigai/Athi Naveena Maruthuvam/27th May 2018

Download Interview Transcript (Tamil)

முன்னுரை

நம் உடல் முழுவதும் தேவையான இரத்தத்தை வழங்கும் வேலையை இதயம் இரத்த நாளங்களின் துணையுடன் செய்கிறது.இதயம் ஒவ்வொரு முறை சுருங்கி விரியும் போது சுமார் 70 மி.லி இரத்தத்தை அது வெளியேற்ற வேண்டும் சில நேரங்களில் அது இல்லாமல் போய் விடும். அவ்வாறு இதயம் தனது வழக்கமான வேலையைச் செய்ய இயலாமல் இருக்கும் நிலையை இதய செயலிழப்பு,அதவாது(heart failure) என்பார்கள்.இதற்கு முக்கிய காரணம் இரத்த  குழாய்களில் அடைப்பு ஏற்படுவது தான்,90%நோயாளிகளின் இதய செயலிழப்புக்கு காரணம் இரத்தக் குழாய்களில் அடைப்பு தான் இதனால் மாரடைப்பு வருகிறது.மாரடைப்பு வருவதினால் இருதயச் செயலிழப்பு உண்டாகிறது.10% முதல் 20%மட்டுமே இரத்த குழாய் அடைப்பு உள்ளவர்களும் இதயச் செயலியப்பிற்கு போவார்கள் அதற்க்கு காரணம் இரத்த சோகை(animia) சில பேருக்கு (viral disease) வைரஸ் தோற்று உண்டாகி இதய தசைகளை தாக்கி (heart muscle)பலவீனமாக்குகிறது.இதய செயலியப்பு என்றாலே இதயம் பலவீனமாக இருக்கும். எப்பொழுது இதய தசைகள் ஒரு குறிப்பிட்ட அளவை விட செயலிழந்து போகிறதோ அது தான் இதய செயலிழப்பு என்கிறோம்.சாதாரணமாக மாரடைப்பு வந்தப் பிறகு இதய செயல்பாடு 60% இருந்து 52%,48%என்றுக் குறையும். சில பேருக்கு இந்த இதயச் செயல்பாடு 40சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் போது அதிகபட்சமாக இதைதான் 50 முதல் 60% இதயச் செயலிழப்பு என்கிறோம்.40% குறைவாக இதயச் செயல்பாடு குறையும் போது அதை இதய செயலியப்பு என்கிறோம்.சில நோயாளிக்கு(contraction)சுருங்கும் தன்மை குறைவாக இருக்கும் போது ef குறையும் (ef 40%,30%) சில நோயாளிக்கு இதயத்தின்  செயல்பாடுகளில் சுருங்குதல்(contraction) நன்றாக இருக்கும்,விரிவடையும் தன்மை குறைவாக இருக்கும்.விரியும் தன்மைக் குறைவாக இருக்கும் இதை (diastoic dysfunction)என்று  கூறுவோம் இருதய செயலிழப்பு என்று ஆகும் போது இருதய நோயின் முடிவு நிலையில்

1)angina(இதய வலி)

2)heart attack(மாரடைப்பு)(myocardial Infraction)

இதை எப்படி நடைமுறையில் கண்டுபிடிப்பது என்றால் (echo)எக்கோ கார்டியோகிராம் மூலம் நோயாளிகள் EF(ejection fraction) எவ்வளவு இருக்கும் என்று அறியலாம்.

இந்த EF  தான் இதயத்தின்(pumping function)ஐ அளவிடுகிறது EF என்றால்,இதயம் என்பது ஒரு cavity மாதிரி அதில் எவ்வளவு இரத்தம் உள்ளே வருகிறதோ அந்த இரத்தத்தை அழுத்தி வெளியேற்ற வேண்டும்.எத்தனை சதவீதம் அதை அழுத்தி வெளியேற்றுகிறதோ அது தான் EF என்கிறோம்.அழுத்தம் குறைவாக இருக்கும் போது இதயம் பலவீனமாக இருக்கும். வெளியே போகும் இரத்தத்தின் அளவும் குறையும்,இந்த அழுத்தத்தின்(efficiency) குறைவதை தான் EF மூலம் அளவீடு செய்கிறோம்.low(EF) அப்படி என்றால்  குறைந்த அழுத்தம் என்று அர்த்தம் நோயாளிக்கு ECHO எடுத்து பார்க்கும் பொது இந்த EF அளவு மிக குறைவாக இருக்கும் . பல்வேறு இதய நோய்களில்  திடிரென்று நாளடைவிலோ இதயம் பாதிக்கப்படும் போது  இதய தசைகள் சுருங்கி விரியும் தன்மை குறைந்துவிடுகிறது . இதன் விளைவாக இதயத்தின் வேலைப்பாடு அதிகம் ஆகிறது   இந்த நிலையை சரி செய்ய இதயம்   வழக்கத்தைவிட வேகமாகவும் அதிகமாகவும் துடிக்கிறது இதயம் விரிந்து அதன் கொள்ளளவில் அதிகப்படுத்திக்கொள்கிறது இவற்றின் மூலம் இதயத்திற்கு இரத்தத்தை கொடுக்க முயற்சிக்கிறது .தொடக்கத்தில் இந்த முயற்சியால் இதயத்திற்கு வெற்றி கிட்டும் என்றாலும் .நாளடைவில் இதயம் செயல் திறனை இழந்து இதயம் இயல்பாக சுருங்கி விரிய சிரமப்படுகிறது .இதனால் இதயத்தில் இருந்து வெளியேறும் இரத்தத்தின் அளவு குறைந்து விடுகிறது .இதே போல் உடலின் பல பகுதிகளில் இருந்தும் நுரையீரலில் இருந்தும் இதயத்திற்கு. இதனால் நுரையீரலில் உடலிலும் நீர் உண்டாகிறது  - இதுவே இதய செயலியப்புக்கு முக்கிய கரணம் ஆகும் .  heart failure இதய செயலிழப்பு உள்ளவர்களுக்கு மூச்சு திணறல் நெஞ்சு வலியை விட அதிகமாக இருக்கும். அவர்களால் தங்களுடைய அன்றாட வேலையை கூட செய்ய இயலாமல் போகும்.எடுத்துக்காட்டாக குளிப்பது , துணிதுவைப்பது . பல் துவக்குவது உட்கார்ந்து  தொலைக்காட்சி பார்க்கும் போது கூட இந்த மாதிரி சின்ன வேலையை கூட செய்ய இயலாமல் போகிறது      அந்த நேரத்தில் கூட மூச்சு திணறல் இருக்கும் .இந்த மூச்சு திணறலை அப்படியே விட்டு விட்டால் இரவு   படுக்க முடியாது ஏன் என்றால் இதயத்தின் (Pumping function )குறைவதினால் உடலில் நீர் தங்க ஆரம்பித்துவிடும் .காலில் வீக்கம் ,கைகளில் வீக்கம் ,வயிறு வீக்கம் இருக்கும் பொது கொஞ்சமாக சாப்பிட்டாலே நிறைய சாப்பிட்ட மாதிரி இருக்கும் .சாப்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொண்டே போவார்கள் .அதன் பிறகு இரவு படுக்கும் பொது இந்த நீர் எல்லாமே நுரையீரலுக்கு போகும் அவரு போகும் போது  வறட்டு இருமல் ஏற்படும். பகலில் நன்றாக இருப்பார்கள் .எப்போது படுகிறார்களோ அப்போது வறட்டு இருமல் இருக்கும் .வறட்டு இருமாளோடு படுத்தால் மூச்சு திணறல் ஏற்படும் , தேங்கிய நீர் எல்லாம் நுரையீரலுக்குள் இருப்பதால் மூச்சு திணறல் ஏற்படும் .உடனே எழுந்து உட்க்கார்ந்து விடுவார்கள் .ஒரு சில நோயாளிகள் இரவில் நன்றாக தூங்கிக்கொண்டு இருப்பார்கள்    திடிரென்று எழுந்து நிற்பார்கள் . இதற்கு கரணம் என்னவென்றால் நீர் நுரையீரலுக்குள் நிறைந்து கொண்டே வரும் பொது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் போகும் பொது மூச்சு விட முடியாது . அதற்கு பிறகு கொஞ்ச நேரம் உட்கார்ந்து கொண்டோ நின்று கொண்டோ இருந்தால் கொஞ்சம் கொஞ்சமா நீர் குறைந்து ஒரு முன்னேற்றம் தெரியும் .அதற்கு அடுத்து எடை கூடுதல் . திடீர் என்று ஒரு வராத்தில் 5 முதல் 6 கிலோ வரை யாருக்கும் எடை கூடுவதில்லை இந்த இதய செயலிழப்பே நோயாளிகள் எடைபோடுதல் திடீர் என்று அதிகமாக இருக்கும்.ஏன் எடை போடுகிறது என்றால் சிறுநீரின் அளவு கொஞ்சம் ஹொஞ்சமாக குறையும் .உடலில் நீர் தேங்கி கொண்டே இருக்கும் .உடல் எடை  கொண்டே  இருக்கும் .இந்த உடல் கூடி கொண்டே போகும் போது உடனடியா நீங்கள் மருத்துவரை பார்க்க வேண்டும் . அப்படி பார்க்காத பட்சத்தில் 2 அல்லது 3 நாட்களில் எடை கூடி  கொண்டே இருக்கும் மூச்சு திணறல் அதிகமாகும். 4 நாளில் ஒரு மருத்துவமனையில் அவசரமாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க படுவார். இந்த (admission ) எப்படி என்றால் இதய செயலிழப்பு நோயாளிகளுக்கு 1 வருடம் முதல் 2 வருடத்திற்குள் மூச்சுதிணறலால் மருத்துவமனையில் சேர்க்கப்படுவார்கள் .திரும்ப திரும்ப மருத்துவமனையில் சேர்வது இதய செயலிழப்புக்கு முக்கிய கரணம் ஆகும்.

ECHO எடுக்கும் போது இதய மருத்துவர் சொல்வார்கள் Heart pumping function வழக்கமா இருப்பதை விட குறைவாக உள்ளது என்று சொல்லுவார்கள். EF தான் pumping function ஐ அளவீடு செய்வது இதயத்தின் அழுத்த செயல்பாடுகள் சரியாக இல்லை என்று   தெரிந்தாலும் தகுந்த சிகிக்சை முறைகள் எடுத்து கொண்டால் இதய முன்னேற்றம் அடைய செய்யலாம்.

நடைமுறை செயல்பாடுகள் நடக்கிறது.எடை தூக்குவது ,நன்றாக தூங்குவது,பசி எடுத்தால் என்று எல்லாமே நன்றாக இருக்கும்.ஆனால் இந்த இதய செயலிழப்பு நோயாளிகள் சிறப்பு பிரிவு மருத்துவமனைக்கு சென்று உடனடியாக இந்த சிகிச்சை முறையை எடுத்து கொள்ள வேண்டும்.

அதனால் தான் இந்த Heal your heart  - Vaso Meditech Pvt Ltd ,EECP Center .இது eecp சென்டர் மட்டும் இல்லை இது ஒரு இதய செயலிழப்பு கிளினிக் Anti - Heart Failure Clinic இதய செயலிழப்பு வருவதற்க்கு முன்கூட்டியே இதய செயலிழப்பை தடுக்க முடியும்   EF -30%-40% Heart Pump இருக்கும் போது இந்த eecp சிகிச்சை எடுக்கும் போது திரும்ப திரும்ப மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்வது நெஞ்சுவலி அதிகமாவது .வாழ்கை தரத்தை உயர்த்துவது .மூச்சு திணறல் இவை எல்லாமே அந்த நோயாளி தடுக்க முடியும் .

இதய செயலிழப்பை 2 விதமாக பார்க்கலாம் இதய function 35-40%குறைந்த பிறகு சில பேருக்கு அவர்கள் உடல் ஒத்துழைக்கிறது. அதை compensation என்று சொல்கிறோம். அப்படி  compensation பண்ணிவிட்டால் அவர்களுக்கு நிறைய தொந்தரவு இருக்காது, அவர்கள் நடக்க முடியும் 15 முதல் 20 நிமிடங்கள் நடக்க முடிகிறது.

ஆனால் சில பேருக்கு அதே 30-40% இருந்தாலும் அவரகள் உடல் அதற்கு ஒத்துழைக்காது.அது ஒரு Non - compensation. உடல் நிலை compensation பண்ணவில்லை என்றால் அதிகமான தொந்தரவுகள் இருக்கும். சிறிய வேலைகள் கூட செய்ய இயலாது.

இவர்கள் எல்லோருக்கும் இந்த EECP சிகிச்சை முறை ஒரு  முன் எச்சரிக்கை (Advance Heart Failure )சிகிச்சை முறை ஆகும். அணைத்து Heal your Heart vaso Meditech Center களிலும் இதை உருவாக்கி இதன் மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதய செயலிழப்பிற்கு முக்கிய காரணம் (Heart Pumping Efficiency )இதய அழுத்த செயல்பாடு குறைவாக இருக்கிறது என்றால் இந்த EECP சிகிச்சை முறையில் இரத்த ஓட்டத்தை இதயத்திற்க்கு அதிகப்படுத்தி நிறைய இரத்த நாளங்கள் உருவாகின்றதால் வழக்கமாக போகிற இரத்தத்தை விட கொஞ்சம் அதிகமாக இரத்த ஓட்டம் இதய தசைகளுக்கு செல்லும்.அவ்வாறு அதிகப்படியான இரதம் செல்வத்தினால் இதயத்தசைகள் முன்பைவிட அதிகமாகும். இரத்த அழுத்த செயல்பாடு 10 - 15% அதிகரிக்கும்.இந்த அளவிற்கு அழுத்த செயல்பாடு அதிகரித்தலே நோயாளிகளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவிற்கு முன்னேற்றம் இருக்கும். அதிக நோயாளியை நங்கள் பார்த்து இருக்கிறோம் சிகிச்சை எடுப்பதற்கு முன்னாள் ஒரு 2 நிமிடம் கூட நடக்க முடியாது என்று சொல்லுவார்கள். சில பேருக்கு வேகமா பேசினால் கூட மூச்சு திணறல் ஏற்படும். அந்த மாதிரியான நோயாளிகள் 20 நாட்கள் சிகிச்சை எடுக்கும் போதே அவர்களுக்கு தைரியமாக 1 - 2 கி.மீ  எந்தவிதமான மூச்சு திணறல் இல்லாமல் நடக்க முடிகிறது.வழக்கமா செயல்களை செய்ய முடிகிறது.கொஞ்சம் எடை தூக்குதல், குளிப்பது இந்த மாதிரியான சிறிய வேலைகள் முடிகிறது.15 நாட்கள் சிகிச்சை எடுக்கும் போதே இவை எல்லாம் செய்ய முடிகிறது.இதற்கு கரணம் இரத்த ஓட்டம் அதிகமாக இருப்பதுதான்.

இந்த மாதிரி இதய  செயலிழப்பு நோயாளிகளுக்கும் சிறுநீரின் அளவு குறைவதால் சிறுநீரகமும்  பாதிக்கப்பட்டு விடும்.இரத்தத்தில் urea, creatinine உப்புச்சத்து அதிகமாகிவிடுகிறது.இந்த EECP சிகிச்சை மேற்கொள்ளும் போது இரத்த ஓட்டத்தை இதயத்திற்கு மட்டும் இல்லாமல் சிறுநீரகத்திற்கும் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது.இதனால் சிறுநீரும் அதிகரிக்கும் அவ்வாறு வெளியேறும் போது தானாகவே எடை குறைய தொடங்கும்.

      காரணம் என்னவென்றால் சிறுநீர் வெளியேறுவது அதிகரிக்கிறது.இதனால் இதயத்தின் Contraction அதிகரிக்கிறது. தானாகவே நோயாளிகளுக்கு உபயோகமாகிறது.

அடுத்த வகையில் இந்த EECP முறையில் இரத்த  ஓட்டத்தை உடலில் எல்லா பாகங்களுக்கும் அதிகரிக்கிறது.எந்த பாகத்திற்கு இதயத்தின் செயல்பாடு பலவீனமாக இருக்கிறதோ அந்த பகுதிக்கு இயற்கையாகவே இந்த EECP மூலம் இரத்த ஓட்டம் அதிகமாகிறது. இரத்த ஓட்டம்  அதிகரிக்கும் போது நோயாளிகள் தாங்களாகவே முன்னேற்றம் நன்றாக இருப்பதை உணர்வார்கள் அவர்களின் வாழ்க்கை தரம் முன்னேற்றம் ஆகும்.

இதய நோயாளிகள் ஒரு சில வேலைகள் செய்தல் கூட சோர்ந்து விடுவார்கள். இது எல்லாமே ஒரு உற்சாகம் கிடைக்காதது போல் இருக்கும்.EECP  சிகிச்சை முறையில் கால்களில் மூன்று ஜோடி காற்றுப்பைகள் நிரப்பப்படும். இந்த காற்றுப்பைகள் இதயம் சுருங்கி விரியும் போது அதே நேரத்தில் இதயம் விரியும் போது நன்றாக அழுத்தம் கொடுக்கும் இதனால் கால் பகுதியில் இரத்தம் வழக்கத்தை விட கால் பகுதியில் இருந்து அதிக வேகத்தில் அலுத்துவதிலும் இரத்தநாளங்கள் வழியாக இதயத்திற்கு செல்லும். இதனால் செயல்படாமல் இருக்கும் இரத்த நாளங்கள் இரத்தத்தை கொண்டு செல்லும் வகையில் அமைகிறது.

இவ்வாறு திறந்துவிடப்படும் இரத்தநாளங்கள் நிரந்திரமாக இதயத்திற்கு  இரத்தம் கொண்டு செல்லும் குலாய்களாக மாறி ஏற்கனவே அடைக்கபட்ட இதய தசைகளுக்கு தேவையான இரத்தத்தை அளிக்கும் நிரந்தர பாதையாகிறது.

இந்த EECP  சிகிச்சை எடுத்து கொள்வதற்கு முன்பாக EECP மையத்திற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக வரவேண்டும். சிகிச்சை மேற்கொள்வதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு உணவு உட்கொண்டு இருக்க வேண்டும். 2 மணி நேரத்திற்கு காபி,டீ என்று எதுவும் அருந்த கூடாது. வழக்கமாக உட்கொள்ளும் மாத்திரைகள் சில மாத்திரைகளை சிகிச்சைக்கு பின் எடுக்க சொல்வார்கள். மற்ற மாத்திரைகள் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் முறையிலே எடுத்து கொள்ளலாம்.

சிகிச்சைக்கு வந்த பிறகு உங்களை மருத்துவர் பார்த்துவிட்டு , Blood pressure, Heart Rate எல்லாமே பார்த்துவிட்டு spygmocor மூலம் Arterial Stiffness சில சோதனைகள் செய்து முடித்த பிறகு EECP சிகிச்சை மேற்கொள்ளலாம் சிகிச்சை தொடங்குவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பு சிறுநீர் கழித்துவிட்டு வர வேண்டும். சிறுநீர் பைகள் எல்லாமே காலியாக இருக்க வேண்டும். சிகிச்சை எடுப்பதற்கு முன்பு pant   கொடுப்பார்கள். எதற்காக என்றால் வழக்கமா போடும் pantல் cuff அழுத்தும் பொது தோள்களில் சிதைவு வரலாம். இதை தடுப்பதற்கு ஒரு Elastic Pant கொடுப்பார்கள்.

ஆன் நோயாளிகள் நெஞ்சு பகுதியில் இருக்கும் முடியை எடுப்பது நல்லது.Electrodes Very Sensitive அது தோலில்  படும்போது நெஞ்சு பகுதியில் வைக்கும் போதும் அதில் முடி இருந்தால் Electrodes குறைவாக இருந்தால் சிகிச்சையை பாதிக்கும்.

அதனால் முடி எல்லாம் அகற்றி இருக்க வேண்டும்.சிகிச்சை தொடங்குவதற்கு முன்பு மறுபடியும் சிகிச்சை அளிப்பவர் (Therapist ) BP, எடை எல்லாம் பார்த்து விட்டு சிகிச்சை படுக்கையில் உங்களை படுக்க வைத்து அதன் பிறகு Electrodes ஓட்டுவார்கள்.சிகிச்சை திரையில் (Monitor ) சேர்த்துவிடுவார்கள். சிகிச்சை எடுக்கும் போது ECG  தொடர்ச்சியாக பதிவு ஆகும். ஒரு சிறிய (Nob )மாதிரி மாதிரி கை விரலில் போடுவார்கள்.

அது உங்கள் கைகளிள் உள்ள இரத்த ஓட்டத்தை அலை அலையாக திரையில் ECG Waveform இதய துடிப்பு, இரத்தத்தின் ஆச்சிஜன் அளவு அனைத்தும் திரையில் (Monitor)தெரியும். அதன் பிறகு சிகிச்சை அளிப்பவர் சிகிச்சை ஆரம்பிக்கிறோம் என்று கூறுவார்கள்.சிகிச்சை ஆரம்பிக்கும் போது  கால்களில் அழுத்தம் உண்டாகும்

இந்த அழுத்தம் 300mmHg  அதிகபட்சம் கொடுப்பார்கள். இதனால் எந்த பின் விளைவும் இருக்காது. இது ஒரு சிறிய மசாஜ் மாதிரி இருக்குமே தவிர வலி இருக்காது.இவை அனைத்தும் கூறிய பிறகு சிகிச்சை அளிப்பவர் சிகிச்சையை ஆரம்பிப்பர்.

வழக்கமாக அழுத்தம் (Pressure) 80mm குறைந்த அழுத்தத்தில் கொடுத்து சிறிது சிறிதாக அழுத்தத்தை அதிகப்படுத்துவார்கள். அப்போது உங்கள் மருத்துவர் எல்லாமே நன்றாக இருக்கிறதா என்று பரிசோதனை செய்வார்கள். அதன் பிறகு Monitor திரையில் எவ்வளவு இரத்த ஓட்டல் அதிகரிக்கிறது மெதுவாக கவனித்து கொண்டே இருப்பார்கள்.(Based On blood flow function )எவ்வளவு இரதம் அதிகரிக்கிறதோ அதற்கு ஏற்றார் போல் காலில் இருக்கும் அழுத்தத்தையும், இரத்த ஓட்டத்திற்கு ஏற்றார் போல் Inflation , Deflation அதிகப்படுத்துவார்கள்.(once inflation, Deflation to ECG, உங்கள் ECG + Machine link ஆகிவிட்டால், இதய துடிப்பை கவனித்து cuff inflation, Deflation ஆகும்.அதாவது compression, decompression ஆகும். அதாவது இதயம் விரிவடையும் போது cuff சுருங்கும் 300mmHg அழுத்தம் கால்களில் கொடுத்து அது அலுத்துவதினால் கால்களில் உள்ள இரத்த ஓட்டம் Reverse direction இதயத்தை நோக்கி போகும்.கால்களில் உள்ள இரத்த ஓட்டம் இதயத்திற்கு 2-3  மடங்கு அதிகமாகும் அதே நேரத்தில் இதயம் சுருங்கும் போது cuff விரிவடையும்.ஒவ்வொரு இதயத்துடிப்பின் போதும் கால்களில் உள்ள இரத்த ஓட்டம் இதயத்திற்கு 2-3 மடங்கு அதிகமாகும். அதே நேரத்தில் (Heart Pump) இதய செயல்பாடு அழுத்தம் போது இந்த cuff Cuff Deflate ஆகும்.இதயம் சுலபமாக இரத்த ஓட்டத்தை அனுப்ப முடியும்.(Heart work load)இதயத்தின் வேலைப்பாடு 50% Machine கொள்ளும். அதே நேரத்தில் இரத்த ஓட்டத்தை இதயத்திற்கு 2-3 மடங்கு .அதிகப்படுத்தும். EECP சிகிச்சை பெற்ற நோயாளிகள் இதற்கு பின் நன்றாக உடல் பயிற்சி செய்ய முடியும்.நீண்ட தூரம் நடக்கவும் முடிகிறது. மருந்து மாத்திரைகள் குறைத்து கொள்ளவும் முடியும் EECP சிகிச்சைக்கு மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை.

நோயாளியின் பெயர் திரு . Kesarullu  6 மாதத்திற்க்கு முன்பு clinic வந்து இருந்தோம்.6 முதல் 1 வருடத்திற்கு முன்பு மாரடைப்பு வந்ததினால் இதய அழுத்த செயல்பாடு குறைந்து விட்டது.இயல்பாக 50-60% இருக்க வேண்டும்.அனால் இவருக்கு மாரடைப்பு வந்ததினால் அழுத்த செயல்பாடு (Pumping Function) குறைந்து 30-35%  விட்டது. அது மட்டும் இல்லாமல் நடந்தால் நெஞ்சுவலி இருந்தது.அவருக்கு angiogram செய்ய பரிந்துரைத்தார் ஆஞ்சியோ செய்வதில் நோயாளிக்கு விருப்பம் இல்லை அதே நேரத்தில் ஆபத்தும் இருக்கிறது. இதய செயல்பாடு 30-40% இருப்பதால் மருந்து மாத்திரைகள் மூலம் குணப்படுத்தலாம்.என்று 6 மாதங்கள் மாத்திரைகளை எடுத்து வந்தார் இருந்தாலு அவருக்கு நடக்கும் பொது வலிக்க ஆரம்பித்து விட்டது.

இவரால் 10-15 நிமிடங்கள் மட்டுமே நடக்க முடியும்.அதன் பிறகு வலி வந்ததும் நின்றுவிடுவார்.அப்படி இருக்கும் போது அவர் EECP சிகிச்சைக்கு வந்தார்.திரும்ப Echo எடுத்து பார்க்கும் பொழுது EF 35% இருந்தது.அதன் பிறகு 35 நாட்கள் சிகிச்சை எடுத்து கொண்டார்.15 நாட்கள் சிகிச்சை எடுக்கும் போதே மாத்திரைகள் கொஞ்சம் குறைத்து கொண்டோம்.35 நாட்கள் முடியும் பொழுது தற்போது 1/2 மணி நேரம் எந்த நெஞ்சு வலியும் இல்லாமல் நடக்க முடிகிறது.சிகிச்சை முடிந்து 6 மாதங்கள்  ஆகிவிட்டது.மறுபரிசோதனைக்கு வந்திருக்கிறார்.ஒவொரு நாளும் 30 நிமிடம் முதல் 45 நிமிடம் வரை எந்த வித நெஞ்சு வலியும் இல்லாமல் நடக்க முடிகிறது.திரும்ப Echo எடுத்து பார்க்கும் போது EF 45% இருக்கிறது.

எனக்கு 15 வருடங்களாக சர்க்கரை வியாதி இருக்கிறது.அதற்காக மாத்திரைகள் சாப்பிடுகிறேன்.6 மாதங்களாக நடந்தால் நெஞ்சு வலி வருகிறது.கொஞ்சம் மூச்சு விடவும் சிரமமாக உள்ளது.மருத்துவரிடம் சென்று பார்த்தேன் மருத்துவர் என்னை ஆஞ்சியோகிராம் எடுத்துக்க சொன்னார்.அதற்காக Echo எடுத்து பார்த்ததில் 35% சதவிகிதம் தான் இதய செயல்பாடு இருக்கிறது என்று கூறினார்கள்.ஆஞ்சியோகிராம் செய்தால்தான் எந்த சிகிச்சையும் மேற்கொள்ள முடியும் என்று கூறினார்.இதை என் மகனிடம் கூறும் போது உங்களுக்கு ஏற்கனவே சர்க்கரை உள்ளது அதனால் பிரசனைகள் வரும் இதற்கு வேறு சிகிச்சை முறை இருக்கிறது என்று கூறினார். அதன் பிறகு மருத்துவரின் முகவரியை இணையத்தில் பார்த்து referance எல்லாம் தந்து மருத்துவரை சென்று பார்க்க சொன்னார்கள். இந்த EECP சிகிச்சை முறையை பற்றி சொன்னார்கள்.ஒரு புதிய சிகிச்சை முறையை வைத்து அதிக நோயாளிகள் பலன் பெற்று இருக்கிறார்கள்.அதன் பிறகு மருத்துவரை சென்று சந்தித்தேன்.பிறகு நீங்கள் சிகிச்சையை ஆரம்பிக்கலாம் என்று கூறினார்.35 நாட்கள் எடுத்து முடித்த பிறகு Echo எடுத்து பார்த்ததில் 45% இதய செயல்பாடு இருந்தது.தற்பொழுது எந்த விதமான தொந்தரவும் இல்லை. நல்ல முறையில் நடக்க முடிகிறது.உற்சாகமாக இருக்க முடிகிறது.6 மதத்திற்கு முன்பு நடந்தால் வலி வரும் படபடப்பு இருக்கும்.மூச்சு திணறல் உண்டாகும்.ரொம்ப நேரம் நடக்க முடியாது.இப்போது சிகிச்சை எடுத்த பிறகு எல்லா வேலைகளும் செய்ய முடிகிறது.ஆரம்பத்தில் எனக்கு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.முதல் நாள் எனக்கு Demo மூலம் செய்து கட்டினார்கள்.அதன் பிறகு சிகிச்சை எடுக்கும் போது ஒவ்வொரு நாலும் முன்னேற்றம் இருக்கிறது.