Home | Transcriptions of Videos

Non Surgical EECP : DD Pothigai/Athi Naveena Maruthuvam/20th May 2018

Download Interview Transcript (Tamil)

முன்னுரை

இதய நோய் பற்றிய கருத்து:

இதய நோய் என்றதுமே படித்தவர்கள் முதல் பாமர மக்கள் வரை ஒரு இனம் புரியாத அச்சம் ஏற்படுகிறது. ஏனெனில் மரணத்திற்கு மிக முக்கிய காரணம் இதய நோயாகும். நம் இதயத்தின் ரத்த குழாயின் உள் சுவரில் கொழுப்புகள் படியும் இயற்கையாகவே நடைபெறும். உடலில் உள்ள அனைத்து ரத்த நாளங்களிலும் கொழுப்புகள் படியும் என்றாலும் அதைவிட அதிகமாக இதயத்திற்கு தேவையான ரத்த ஓட்டத்தை கொண்டு செல்லும் மூன்று முக்கியமான ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பின் அளவே பொறுத்து சிகிச்சை தீர்மானிக்கப்படுகிறது. (coronary) ரத்த குழாய்களின் அடைப்பின் அளவு குறைவாக இருந்தால் இதய அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அறுவை சிகிச்சை செய்து பலன் இல்லாதவர்களுக்கும், (angio plasty)  செய்து பலன் இல்லாதவர்களுக்கும் மற்றும் அறுவை சிகிச்சை செய்து கொள்ள விருப்பம் இல்லாதவர்களுக்கும் அல்லது அவர்களின் உடல் ஏற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கும் இந்த (EECP) சிகிச்சை முறை முற்றிலும் பயனுடையதாகும்.

Dr S. ராமசாமியின் கருத்து :

சில நோயாளிகள் கூறும்போது, டாக்டர் நாங்கள் பார்க்கும் மருத்துவர் அறுவை  சிகிச்சைசெய்து கொள்ள பரிந்துரைத்தார். எனக்கு பயமாக உள்ளது என்று கூறுவார்கள் உண்மையாக நாங்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டுமா அல்லது மாற்று அறுவை சிகிச்சை ஏதேனும் உள்ளதா என்று கேட்கும்பொழுது மருத்துவர் S. ராமசாமி கூறுகையில் அறுவை சிகிச்சையோ அல்லது (Angio plasty) யோ சில நோயாளிகள் செய்து கொள்ளலாம். சில நோயாளிகள் இது செய்து கொள்ளாமல், மருந்து மாத்திரைகளிலேயோ சரி செய்யலாம் சில நோயாளிகளுக்கு EECP சிகிச்சை முறையே போதுமானது. அதாவது எந்தவிதமான நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை அல்லது (Angio plasty) செய்து கொள்ளலாம், எந்த விதமான நோயாளிகள் EECP சிகிச்சை முறையை செய்து கொள்ளலாம் என்றால், இவற்றை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்.

        1. சீரான நெஞ்சுவலி உடையவர்கள். (stable angina)

        உதாரணம் : மருந்து மாத்திரை எடுத்துக் கொண்ட 10 நிமிடங்களில் குணமடைவது

        2. சீர் அற்ற நெஞ்சுவலி உடையவர்கள். (unstable angina)

        உதாரணம் : மருந்து மாத்திரை எடுத்துக் கொண்டும் குணமடையாதவர்கள்.

 இதில் சீர் அற்ற நெஞ்சுவலி உடையவர்களுக்கு எப்பொழுது வேண்டுமானாலும் இதய பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அவர்களுக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட பிறகு அவர்கள் உறவினர்களுடைய உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விடுவார்கள். அவர்களால் தனியாக எந்த வேலையும் செய்யமுடியாது. அந்த நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவருக்கு மருத்துவர் அறுவை சிகிச்சையோ அல்லது (Angio plasty) யோ செய்யவதால் சீர் அற்ற நெஞ்சுவலி உடைய நோயாளிகளுக்கு முதலில் நெஞ்சுவலி மற்றும் இதய பாதிப்பு தடுக்கப்படுகிறது. மற்றும் மரணம் தடுக்கப்பட்டு நோயாளிகள் அதிக நாட்கள் உயிர் வாழலாம். இந்த மாதிரியான நோயாளிகள் அறுவை சிகிச்சையோ அல்லது (Angio plasty) யோ செய்து கொள்ளலாம். இது ஒரு 20% விழுக்காடு நோயாளிகளுக்கு மட்டும்.

ஆனால் சீரான நெஞ்சுவலி உடைய நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சையோ அல்லது (Angio plasty) யோ செய்தால்   தனக்கு மறுபடியும் இதய பாதிப்பு வராது என்று நோயாளிகள் நினைத்துக்கொள்கிறார்கள். உண்மை என்னவென்றால், மருத்துவ அறிக்கையின்படி இவ்வாறு சீரான நெஞ்சுவலி உடைய நோயாளிகள் அறுவை சிகிச்சையோ அல்லது (Angio plasty) யோ செய்தால் அதில் 2 தான் வெற்றி பெறமுடியும். அதில்  1) நோயாளிகளின் இதய நோய் மற்றும் மூச்சி வாங்கும் பிரச்சனை குறைகிறது. 2) அவர்களால் அதிக தூரம் மூச்சி வாங்காமல் நடக்க முடியும். இதைத்தான் தரமான வாழ்வாதாரம் (Quality of life) என்று கூறுகிறார்கள். ஆகையால் அறுவை சிகிச்சை மற்றும் (Angio plasty) செய்து கொள்வது நோயாளிகளுக்கு தரமான வாழ்வாதாரத்தை தருகிறதே தவிர, வாழ்நாளை அதிகப்படுத்தவோ அல்லது எதிர்காலத்தில் இதய வலி உருவாகாமல் (Heart Attack) தடுக்கவோ முடியாது.

இப்பொழுது (Heal Your Heart EECP) சிகிச்சை முறை எதனால் செய்கிறோம் என்றால் இந்த மாதிரியான சீரான நெஞ்சுவலி உடைய இரண்டாவது மருத்துவ ஆலோசனை அவர்களின் தரமான வாழ்வாதாரத்தையும், நெஞ்சு வலியையும் அறுவை சிகிச்சையோ (Angio plasty) யோ செய்து கொள்ளாமல் இந்த (EECP) சிகிச்சை மற்றும் மருந்து மாத்திரை மூலம் கொடுக்க முடியும். இந்த (EECP) சிகிச்சை முறை இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை அதிகரித்து கொடுப்பதால் நிச்சயமாக இதய தாக்குதலையும் தடுக்கலாம். ஆகையால் சீரான நெஞ்சுவலி உடையவர்களுக்கு அறுவை சிகிச்சை மற்றும் (Angio plasty) கொடுக்காமல் இந்த EECP சிகிச்சை முறையை தேர்ந்தெடுக்கலாம். இதனால் நோயாளிகளின் வாழ்வாதாரம் (Quality of life) மேல்படுத்தப்படுகிறது.

EECP சிகிச்சை எடுத்துக்கொண்ட நோயாளி பற்றி Dr. S. ராமசாமியின் கருத்து:

திரு. சுப்பிரமணியன் தஞ்சாவூரை சேர்ந்த இதய நோயாளியான இவர் கடந்த 20 வருடங்களாக சர்க்கரை நோயினாலும், உயர் இரத்த அழுத்தத்தினாலும் பாதிக்கப்பட்டவர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இதய நோயினால் பாதிக்கப்பட்டு மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எடுக்கப்பட்ட ECG நன்றாக இருக்கவே TMT பரிசோதனை செய்து (Angiogram) செய்யப்பட்டது. அதில் 3 ரத்த நாளங்களிலும் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவர் நோயாளியை அறுவை சிகிச்சை செய்து கொள்ளும்படி பரிந்துரை செய்தார். மேலும் நோயாளியின் இதய அழுத்தத்தின் செயல்பாடுகள் நன்றாகவே இருந்ததால்.

நோயாளி அறுவை சிகிச்சை செய்து கொள்வதை விரும்பவில்லை, மாறாக, இந்த அதி நவீன சிகிச்சை முறையான EECP சிகிச்சை முறையை தேர்ந்தெடுத்தார். EECP  சிகிச்சையின் நாட்கள் முடியும்போதே நோயாளிக்கு மூச்சி வாங்கும் பிரச்சனையும், இதய வலியும் குறையத்தொடங்கியது. இச்சிகிச்சையின் முழு பலனான 35 நாட்களை முடிக்கவே அவர் தனது பழைய நிலைமையை அடைந்தார். 10 நிமிடங்கள் நடந்தாலே மூச்சிவாங்கும் பிரச்னையும், நெஞ்சுவலியும் ஏற்படும். அவரால் தொடர்ந்து நடைப்பயிற்சி மேற்கொள்ள முடியாத நிலையில் இருந்தார். அதனால் இந்த EECP சிகிச்சையை பெற்ற பிறகு அவரால் தினமும் 4 கிலோ மீட்டர் வரை மூச்சி வாங்காமல் நெஞ்சுவலி வலி இல்லமால் நடை பயிற்சியை மேற்கொள்ள முடிகிறது. ஆகையால் சீரான நெஞ்சுவலி உள்ளவர்கள் (stable patient) அறுவை சிகிச்சையோ, (Angio plasty) யோ எடுத்து கொள்ளாமல் இந்த EECP சிகிச்சையை பெற்றுக்கொள்ளலாம்.  

EECP சிகிச்சை எடுத்துக்கொண்ட நோயாளி திரு . சுப்பிரமணியனின் கருத்து :

எனது பெயர் சுப்பிரமணியனின் வயது 60, நான் தஞ்சாவூரில் வசிக்கிறேன். எனக்கு 2 மாதங்களுக்கு முன்பு நெஞ்சுவலி ஏற்ப்பட்டது. மருத்துவரை அணுகி ECG, Echo, TMT ,மற்றும் (Angio gram) செய்தேன். (Angio gram) ல் என் இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் 3 முக்கியமான ரத்த நாளங்களிலும் அடைப்புகள் இருப்பதாக, உடனடியாக அறுவை சிகிச்சை செய்யுமாறு மருத்துவர் பரிந்துரைத்தார். ஆனால் எனக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள விருப்பம் இல்லை. நான், அதற்கு மாற்று சிகிச்சை முறையை பற்றி அறிந்தேன். எனக்கு 10 நிமிடங்கள் நடந்தாலே மூச்சி வாங்கும் பிரச்சனையும். நெஞ்சுவலியும் அதிகம் இருந்தது நான் EECP சிறப்பு நிபுணர் Dr. S. ராமசாமியை சந்தித்து என்னுடைய இதயவலி பிரச்சனையை கூறினேன். அவர் என்னை பரிசோதித்துவிட்டு இந்த EECP சிகிச்சை முறையே போதுமானது. வேறு எந்த அறுவை சிகிச்சையும் செய்ய தேவையில்லை என்று கூறி இந்த EECP சிகிச்சையை அளித்தார். இதை 35 நாட்கள் எடுத்துக்கொள்ளவேண்டும் என்றும் கூறினார். முதல் 15 நாட்களிலேயே என்னுடைய மூச்சி வாங்கும் பிரச்சனை குறைந்தது. நான் தொடர்ந்து 35 நாட்களும் இந்த சிகிச்சை முறையை பெற்றுக்கொண்டேன். 10 நிமிடங்கள் கூட மூச்சி வாங்குதல் மற்றும் நெஞ்சுவலி இல்லாமல் நடக்க முடியாத நிலையில் இருந்த என்னால், இந்த சிகிச்சையை 35 நாட்கள் முழுமையாக பெற்ற பிறகு தினமும் 4 கி. மீ. மூச்சி வாங்கும் பிரச்சனை மற்றும் நெஞ்சுவலி இல்லமால் திரும்பியதை நான் சந்தோஷமாக கருதுகிறேன். என்னுடைய வேலைகளை யாருடைய உதவியும் இல்லமால் என்னால் தனியாக செய்ய முடிகிறது. இசிகிச்சையின்போது மருத்துவர் S. ராமசாமி அவர்களும், செவிலியர் பெரு மக்களும் மற்றும் ஊழியர்களும் என்னை மிக அக்கறையுடன் கவனமாக பார்த்துக் கொண்டனர். ஆகையால் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நோயாளி உமர் பற்றி Dr. S. ராமசாமியின் கருது :

 திரு, உமர் 65 வயதான நோயாளி, கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர். சுமார் 2 வருடங்களுக்கு முன்பு அதிகப்படியான இதய தாக்குதல் ஏற்பட்டு, 2 நாட்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு மருத்துவர்கள் (Angio gram) செய்து பார்த்ததில் இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் 3 முக்கிய ரத்த நாளங்களிலும் அடைப்பு இருப்பதை அறிந்தார்கள்.மேலும் அவருக்கு சிறு நீரக கோளாறு இருந்ததால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்றும், மருந்து மாத்திரைகளையோ உட்கொள்ளும்படி மருத்துவர்கள் கூறினார்கள். அதேபோல் நோயாளியும் சுமார் 1 வருடமாக மருந்து மாத்திரைகளை உட்கொண்டும் அவருக்கு எந்த விதமான மாற்றமும் தெரியவில்லை. மேலும் அவரால் 10 நிமிடங்கள் கூட நடைப்பயிற்சி மேற்கொள்ள முடியாது. இந்த நிலைமையில் இருந்த அவர் EECP சிகிச்சை முறையை பற்றி அறிந்து ராமசாமியை அணுகி இசிகிச்சையை பெற்றுக் கொண்டார். தற்போது 12 நாட்கள் முடியவே அவருக்கு மூச்சு வாங்கும் பிரச்சனை தற்போது இல்லை என்றும். அவரால் இயன்ற வேலையும் செய்யவும் முடிகிறது. இன்னும் 28 நாட்கள் சிகிச்சையின் முடிவில் அவரால் மூச்சு வாங்காமல் நெஞ்சுவலி இல்லமால் நடை பயிற்சியை மேற்கொள்ள முடியும். மேலும் இந்த சிகிச்சை முறையில் நோயாளியின் இதய துடிப்பு, சுவாசத்தின் அளவு மற்றும் ரத்த ஓட்டத்தின் அளவு கணக்கிடப்படுகிறது. ஆகையால் இந்த EECP சிகிச்சை முறையின் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை இல்லாமால் இதயத்திற்குதேவையான ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்த முடியும்.

நோயாளி உமர் அவர்களின் கருது :

என் பெயர் உமர். கேரளா மாநிலம் திருசூரில் வசிக்கிறேன். சுமார் 2 வருடங்களுக்கு முன்பு எனக்கு அதிக படியான நெஞ்சுவலி ஏற்பட்டது. குளிப்பதற்கு, சுவாசிப்பதற்கு மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும்  சிரமப்பட்டேன். எனக்கு சிறுநீரக கோளாறும் +இருந்தபடியால் மருத்துவர் எனக்கு அறுவை சிகிச்சை அளிக்கவும் மறுத்துவிட்டார். வாழ்வதற்கு என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்திருந்த நான் இந்த EECP சிகிச்சை முறையை அறிந்து சென்னையில் EECP சிகிச்சை நிபுணர் Dr. S. ராமசாமியை சந்தித்தேன். கனிவுடன் கவனித்து, அவர் எனக்கு இந்த EECP சிகிச்சை முறையை பற்றி தெரிவித்தார். தற்போது நான் இந்த சிகிச்சை முறையை 12 நாட்கள் எடுத்துள்ளேன். இன்னும் 23 நாட்கள் உள்ளன. முன்பெல்லாம் குளிப்பதற்கும், நடைப்பயிற்சி மேற்கொள்ளும்பொழுது எனக்கு நெஞ்சுவலி அதிகமாக இருந்தது. தற்போது நான் எடுத்துக்கொண்ட 12 நாட்கள் சிகிச்சை முறையிலேயே எனக்கு இருந்த நெஞ்சுவலி பிரச்சனை படிப்படியாக குறைவதையும், என் வேலைகளை யாருடைய உதவியும் இல்லாமல் செய்வதையும் உணருகிறேன். மீதமுள்ள 23 நாட்களில் நான் முழுமையாக குணமடைந்து விடுவேன் என்ற நம்பிக்கையும் எனக்கு ஏற்பட்டுள்ளது. இந்த சிகிச்சை முறையின் மூலமாக நான் மிக சந்தோஷமாக இருக்கிறேன். எனக்கு சிகிச்சை அளித்துக் கொண்டு வருகிற Dr. S. ராமசாமி அவர்களுக்கும் மற்றும் இந்நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.