Home | Transcriptions of Videos

EECP சிகிச்சை முறை எடுத்துக்கொண்ட முதல் 15 நாட்கள் முடிவிலும் நான் ஏன் முன்னேற்றமடையவில்லை?

Download Interview Transcript (Tamil)

முன்னுரை

இந்த (EECP) சிகிச்சை முறையை தினமும் 1 மணி நேரம் வீதம் 35 நாட்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுவாக ஒரு 80% நோயாளிகளுக்கு ஒரு 15 to 20 நாட்கள் சிகிச்சை முறையிலேயே அவர்களுக்கு முன்னேற்றம் தெரியும்.அதாவது அவர்களுடைய நெஞ்சு வலி குறைவது, மூச்சு விடுவதில் உள்ள சிரமம் குறைவது, வெகு தூரம் நடைப்பயிற்சி மேற்கொள்வது இவை எல்லாமே அவர்களுக்கு 15 to 20 நாட்களிலேயே தெரியும். ஆனால் ஒரு 10% நோயாளிகளுக்கு ஒரு 20 நாள்கள் சிகிச்சை முடிவிலும் அந்த முன்னேற்றம் தெரியாது. இந்த மாதியான நோயாளிகளுக்கு ஒரு 25 to  30 நாள்கள் சிகிச்சை முடிவில் தான் அவர்களுக்கு முன்னேற்றம் தெரியும். அந்த ரத்த குழாயில் உள்ள அடைப்பு மிகவும் (severe) ஆக மூன்று ரத்த நாளங்களில் இருப்பது, முக்கிய ரத்த நாளங்களில் இருக்கும் போது அந்த ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துவதற்கு சில அதிக நாள்கள் தேவைப்படும். அப்படி 30 நாள்கள் சிகிச்சையில் தான் முன்னேற்றம் தெரிகிறது என்றால் அவர்களுக்கு சிகிச்சையின் நாள் கணக்கை 40 நாள்களாக அதிகப்படுத்த வேண்டும். அவர்களுக்கும் மற்ற நோயாளிகளை போல் எல்லா முன்னேற்றமும் கிடைக்கும், ஆனால் 35 நாள் சிகிச்சைக்கு பதிலாக 40 நாள்கள் இந்த சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும்.  அப்படி 40 நாள்கள் சிகிச்சையை எடுத்து கொண்டால் அவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.