Home | Transcriptions of Videos

EECP சிகிச்சை முறையினை எடுக்கும் பொழுது மருத்துவர் என்ன என்ன முக்கிய அறிகுறிகளை சரிபார்ப்பார்?

Download Interview Transcript (Tamil)

முன்னுரை

தினசரி இந்த (EECP) சிகிச்சை முறையை எடுக்கும் போது ஒரு மணி நேரம் அவர்களுடைய (ECG) தொடர்ச்சியாக கண்காணித்து அதில் ஏதாவது மாற்றங்கள் இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். அதன் பின் நோயாளியினுடைய இரத்தத்தில் ஆக்ஸிஜன் (oxygen) அளவு எவ்வளவு இருக்கிறது என்பதை கூர்மையாக கண்காணிக்க வேண்டும். ஏனென்றால் சில நோயாளிகளுக்கு அவர்களுடைய ஆக்ஸிஜன் (oxygen) அளவு குறையும் பொழுது அவர்களுக்கு ஆபத்து அதிகமாகும். ஆகையால் அதற்க்கு ஏற்றார் மாதிரி அந்த (EECP) மையத்தில் ஆக்ஸிஜன் இருக்க வேண்டும். ஆகையால் ஆக்ஸிஜன் குறைந்த நோயாளிகளுக்கு எப்பொழுது ஆக்ஸிஜன் கொடுக்க வேண்டும் என்பதை அங்குள்ள மருத்துவர் தீர்மானிக்க வேண்டும். மேலும் நோயாளியினுடைய உடல் எடையை தினசரி கண்காணிக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக (over all) அவர்களுடைய உடல் எடை அதிகமாவதோ, குறைவதோ இருக்கும் போது அவர்களுடைய மருந்து மாத்திரைகளை அதற்க்கு ஏற்றார் போல் மருத்துவர் சரி (adjust) செய்ய வேண்டும். மேலும் நோயாளியினுடைய     இரத்த அழுத்தத்தை சிகிச்சையின் முன்பும், சிகிச்சையின் பின்பும் கண்காணித்து கொண்டே இருக்க வேண்டும். சில நேரங்களில் நோயாளிகளுக்கு அவர்களுடைய இரத்த அழுத்தும் மிகவும் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஏன்னென்றால் இந்த சிகிச்சையை 1 மணி நேரம் கொடுக்கும் போது சில நோயாளிகளுக்கு இந்த ரத்த அழுத்தம் குறையும். மேலும் நோயாளிகளுக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சிகிச்சைக்கு முன்பும், சிகிச்சை முடித்த பிறகும் அவற்றை கண்காணித்து அதற்க்கு ஏற்றார் போல் அவர்களுடைய நீரிழிவு நோய் மாத்திரையை மாற்றி கொடுக்க வேண்டும். ஆகையால் நாம் சிகிச்சைக்கு போகும்போது (vital signs) என்று கூறுவோம் இவை எல்லாமே உங்களுடைய மருத்துவர் 1 மணி நேரம் கண்காணிக்க வேண்டும். அப்படி கண்காணிக்கும் போது என்ன மாற்றம் இருக்கிறதோ அதற்க்கு ஏற்றார் மாதிரி சிகிச்சையில் கொடுக்கக்கூடிய அழுத்தத்தை சரி செய்து நோயாளிகளுக்கு அந்த சிகிச்சையின் பலன்களை கொடுக்க முடியும்.