Home | Transcriptions of Videos

Published on Jul 09, 2019
இந்த EECP சிகிச்சை முறையை 35 நாட்கள் எடுத்து கொள்வதன் மூலம் இருதயத்திற்கு ரத்த ஓட்டம் நன்றாக போகிறது. இந்த சிகிச்சை முறை முடிந்த பின்பு நோயாளிகள் வழக்கமான உடற்பயிற்சி மேற்கொள்வது மேலும் கொழுப்பு சத்து, சர்க்கரை நோய் இவை அனைத்தையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்கள் என்றால் அவர்கள் திரும்பவும் இந்த EECP சிகிச்சை முறையை பல வருடம் காலங்கள் கழித்து கூட எடுத்துக்கொள்ளலாம். அதே நேரத்தில் இருதய செயல் திறன் குறைவாக இருக்கும் போது அதாவது இருதய செயல் இழப்பு (heart failure) அந்த மாதிரியான நேரத்தில் மீண்டும் ஒரு (20) நாள் இந்த (eecp) சிகிச்சையை எடுத்துக்கொள்ளும் போது இதயத்திற்கு ரத்த ஓட்டமும் நன்றாக முன்னேற்றம் அடையும், நோயாளியினுடைய வாழ்வாதாரமும் மிகவும் நன்றாக இருக்கும். அதனால் இந்த EECP சிகிச்சை முறையை எத்தனை முறை வேண்டுமானாலும் நாம் திரும்ப எடுத்து கொள்ளலாம். அதனால் எந்த ஒரு ஆபத்தும் கிடையாது.