Home | Transcriptions of Videos

வாசோ - மெடிடெக்கின் EECP சிகிச்சை முறையால் என்னுடைய ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க முடியுமா?

Download Interview Transcript (Tamil)

முன்னுரை

ரத்த அழுத்தம்  மற்றும் நீரிழிவு நோய் உள்ள எல்லா நோயாளிகளும் மருந்து மாத்திரைகளை உட்கொள்ளுவார்கள். இருந்தாலும் அந்த ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயின் அளவு குறையவேண்டும் என்றால் அவர்கள் வழக்கமான உடற்பயிற்சி (regular exercise) செய்ய வேண்டும். இது எல்லோருக்கும் தெரியும். இப்பொழுது இந்த (EECP) சிகிச்சையை எடுத்துக்கொள்ளும் போது இந்த இரத்த அழுத்தமும், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டில் இருக்குமா என்று கேட்டால் இந்த (eecp) சிகிச்சை முறை என்பது ஒரு kind of passive exercise என்று சொல்லுவோம். ஏனென்றால் இந்த சிகிச்சை முறையின் போது கால்களில் இருக்கின்ற ரத்த ஓட்டத்தை இருதயத்தை நோக்கி அழுத்தம் மூலம் அனுப்புகிறோம். அப்படி அழுத்தும் போது அந்த ரத்த ஓட்டம்  இருதய தசைகளுக்கு மட்டும் இல்லை உங்களுடைய மூளை(Brain), சிறுநீரகம்(Kidney), லிவர்(Liver) போன்ற எல்லா உறுப்புகளுக்கும் இந்த ரத்த ஓட்டம் அதிகமாகும். அப்படி அதிகமாக ரத்த ஓட்டம் போகும் பொழுது ஒரு உடற்பயிற்சி செய்யும் போது என்ன பலன் கிடைக்குமோ அந்த பலன் இந்த (eecp) சிகிச்சை முறையில்  நோயாளிகளுக்கு கிடைக்கிறது. அப்படி இருக்கும் போது அந்த நோயாளியினுடைய ரத்த சர்க்கரையின் அளவும் குறைகிறது. மேலும் அந்த ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தாலும் இந்த சிகிச்சையின் மூலம் குறையும். அதனால் இந்த (eecp) சிகிச்சையை செய்துகொள்ளும் போது ரத்த அழுத்தமும், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் மிகவும் நன்றாக கட்டுப்பாட்டில் இருக்கும். சாதாரணமாக இருப்பதை விட அதனுடைய அளவு இந்த சிகிச்சை முறையின் போது திட்டவட்டமாக குறையும்.