Home | Transcriptions of Videos

வெளிப்புற தமனி நோய் உள்ள நோயாளிகளால் இந்த வாசோ மெடிடெக் EECP சிகிச்சையை எடுத்துக்கொள்ள முடியுமா?

Download Interview Transcript (Tamil)

முன்னுரை

(Peripheral vascular disease) அதாவது கால்களில் உள்ள ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவது. இந்த மாதிரியான நோயாளிகளுக்கு இந்த( eecp) சிகிச்சை முறையை கொடுக்க முடியுமா என்றால்இரத்த அடைப்பின் தன்மையை பொறுத்து  இப்பொழுது இருதய நோயாளி என்று பார்த்தீர்கள் என்றால் பெரும்பாலான நோயாளிகளுக்கு நீரிழிவு நோயும் இருக்கும். அப்படி நீரிழிவு நோய் இருக்கும் நோயாளிகளுக்கு கால்களில் இருக்கக்கூடிய ரத்த குழாயில் அடைப்பு இருப்பதற்கான வாய்ப்பு மிகவும் அதிகம். அதனால் பெரும்பாலான நோயாளிகளுக்கு நம்முடைய (eecp) சிகிச்சை எடுத்துக்கொள்பவர்களுக்கு கால்களில் சிறு சிறு அடைப்புகள் இருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். ஆனால் முக்கிய ரத்த நாளங்களில் 90 to 100% அடைப்பு இருந்தது என்றால் அந்த மாதிரியான நோயாளிகளுக்கு இந்த (eecp) சிகிச்சை முறையை செய்ய முடியாது. அப்படி செய்தாலும் கால்களில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்பு இருப்பதன் காரணமாக அந்த கால்களில் உள்ள ரத்த ஓட்டத்தை இருதயத்திற்க்கு செலுத்த முடியாது. இந்த மாதிரியான நோயாளிகளுக்கு இந்த (eecp) சிகிச்சை முறையை தவிர்ப்பது நல்லது.