Home | Transcriptions of Videos

Non-Surgical EECP: Makkal TV/Athi Naveena Sikichai/25th August 2018

Download Interview Transcript (Tamil)

முன்னுரை

இதய செயல் இழப்பு (Heart  Failure) பற்றி மருத்துவர் S. ராமசாமி அவர்களின் கருத்து:

இப்பொழுது இதய செயல் இழப்பு (heart failure) என்றால் இதயத்தின் (Pumping function) சாதாரணமாக (normal)  இருப்பதை விட குறைவாக இருக்கும். அதனால் வழக்கமாக நோயாளிக்கு இதய செயல் இழப்பு (heart failure) என்று எப்படி கண்டுகொள்கிறார்கள் என்றால் echo cardiology என்ற பரிசோதனை செய்யும் போது நோயாளியினுடைய (ejection fraction) கொஞ்சம் மோசமாக இருக்கிறது என்று சொல்லுவார்கள். (Ejection fraction) என்பது தான் உங்களுடைய (Pumping function) அளவிடுகிறது. (Ejection fraction) என்னவென்றால் உங்கள்  இதயம் ஒரு (cavity) மாதிரி, அதனால் அதில் எவ்வளவு ரத்தம் வருகிறதோ அந்த ரத்தத்தை (Pump) செய்து வெளியேற்ற வேண்டும். ஆகவே எத்தனை சதவீதம் (pump) செய்து வெளியேற்றுகிறதோ அதை தான் (ejection fraction) என்று சொல்லுவோம். ஆனால் (pumping) பலவீனமாக  இருக்கும்போது இதயம் சுருங்கும் தன்மையும் (contraction) பலவீனமாக இருக்கும். அப்படி இருக்கும் போது ரத்தம் வெளியேறும் அளவும் குறைந்து விடும். அதனால் அந்த (pumping) உடைய திறன் (efficiency) குறைவதுதான் (ejection fraction) மூலம் அளவிடுகிறோம். அதனால் குறைவான (low) ejection fraction என்றால் பலவீனமான (pumping) என்று அர்த்தம். அதனால் இதய செயல் இழப்பு உள்ள நோயாளிகளுக்கு (echo) பரிசோதனை செய்து  பார்க்கும் போது அவங்களுடைய (ejection fraction pumping efficiency) மிகவும் குறைவாக இருக்கும். இதை தான் இதய செயல் இழப்பு (heart failure) என்று சொல்கிறோம்.

இதய செயல் இழப்பு (Heart Failure) பற்றி மருத்துவர் S. ராமசாமி அவர்களின் கருத்து:

இதய செயல் இழப்பு (Heart failure) இதற்க்கு முக்கிய காரணம் (coronary artery disease) ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவது தான். 90% சதவீதமான நோயாளிகளின்  இதய செயல் இழப்புக்கு காரணம் ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதுதான் அதனால் மாரடைப்பு வருகிறது, மாரடைப்பு வருவதனால் இருதய செயல் இழப்பு  ஏற்படுகிறது  ஒரு 10 to 20 நோயாளிகளுக்கு, ரத்த குழாயில் அடைப்பு இல்லாமலேயே அவர்கள் இதய செயல் இழப்புக்கு வருகிறது. அதற்க்கு காரணம் இரத்த சோகை (anemia), இல்லை என்றால்  சில நோயாளிகளுக்கு வைரஸ் நோய் (viral disease), இந்த வைரஸ் நோய் இதய தசைகளை பாதிப்புக்கு உள்ளாகி தசைகளை பலவீனமாக்குகிறது. அதனால் இதய செயல் இழப்பு என்றால் இதயத்தினுடைய தசைகள் பலவீனமாக இருப்பதுதான். எப்பொழுது இதய தசைகள் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு கீழ் பலவீனமாக  போகிறதோ அதை இதய செயல் இழப்பு என்று சொல்கின்றோம். அதனால் சாதாரணமாக ஒரு இதய தாக்குதல் வந்த பிறகு சில நோயாளிகளினுடைய இதய செயல் திறன் ஒரு 60% சதவீதத்தில் இருந்து 52%, 48% என்று  குறையும். ஆனால் சில நோயாளிகளுக்கு (EF level) ஒரு 40% சதவீதத்திற்கும் கீழ் சென்றுவிட்டது என்றால் அதைத்தான்

பெரும்பாலான நேரம் அதாவது ஒரு 50 to 60 விழுக்காடு இருந்த இந்த இதய செயல் திறன் (EF level)படி படியாக குறைந்து ஒரு 40% சதவீதத்திற்கும் கீழ் போவதை தான் இதய செயல் இழப்பு என்று  சொல்கிறோம். சில நோயாளிகளுக்கு இதயத்தினுடைய (pumping function) அதாவது சுருங்கும் தன்மை சாதாரணமாக (normal) இருக்கும், அதே போல் விரிவடைதல் (relaxation), அதாவது pump செயல் முறை என்பது சுருங்க (contract) வேண்டும், விரிவடைய (relax) வேண்டும். சுருங்கும் போது ஒழுங்காக (சுருங்கவில்லை) என்றால் அந்த (ejection fraction) 40%, 35% வரும் போது இதய செயல் இழப்பு (heart failure) ஏற்படும். சில நோயாளிகளுக்கு அந்த சுருங்கும் செயல் திறன் (contraction) நன்றாக இருக்கும் அதாவது ஒரு 55, 60% இருக்கும், ஆனால் (relaxation) விரிவடையும் போது இதய தசைகள் சரியாக விரிவடையாது. அதை (diastolic dysfunction) என்று கூறுவோம். இவை அனைத்துமே இதய செயல் இழப்புக்கு (heart failure) காரணமாகும். ஒரு இதய செயல் இழப்பு (heart failure) என்று வந்த பிறகு, அதாவது இதய நோயின் முதல் நிலையில் (coronary artery disease first stage) உள்ளவர்களுக்கு, ஒரு (angina) நெஞ்சுவலி இருக்கும், இதயம் பாதிக்கப்பட்ட பகுதி (ischeamia) என்று சொல்லுவோம், இரண்டாவதாக இதய தாக்குதல் (heart attack) ஏற்படுகிறது அதை (myocardial Infarction) என்று சொல்லுவோம், இதய தாக்குதல் (heart attack) ஏற்பட்ட பிறகு இதய தசைகளுடைய செயல் திறனை இழந்து அவர்கள் இதய செயல் இழப்புக்கு செல்கின்றனர் இது தான் இதய செயல் இழப்பு ஆகும்.

நோயாளி திரு.முத்துகிருஷ்ணன் பற்றி மருத்துவர் S.ராமசாமி அவர்களின் கருத்து:

இவர் நோயாளி திரு. முத்துகிருஷ்ணன், 64 வயது முதியவர். இவர் கடந்த 1 மாதத்திற்கு முன்பு EECP சிகிச்சைக்காக வந்திருந்தார். இவர் உடைய பிரச்சனை என்னவென்றால், இவருக்கு இதய பிரச்சனை ஏற்கனவே இருந்திருக்கிறது. அதாவது இருதயத்திற்கு செல்கின்ற ரத்த குழாயில் அடைப்பு இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் அவருடைய சிறுநீரக செயல் திறனும் (kidney function) மிகவும் குறைவாக இருக்கிறது,

அதாவது (creatinifel) என்று கூறுவோம், அந்த சிறுநீரக செயல் திறனை கணக்கிட creatinine level பரிசோதனைகள் செய்வார்கள் creatinine அளவும் அதிகமாக இருந்தது அது மட்டும் இல்லாமல் பல முறை அதாவது கடந்த  இந்த 6 மாததில்லேயே 2 முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுவிட்டார். காரணம் என்னவென்றால்  அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் அதிகமாக இருந்தது, அதாவது இதயத்தினுடைய தசைகள் செயல் இழப்பு ஆனதன் காரணமாக இதயத்தினுடைய செயல் திறனும் (pumping function) மிகவும் குறைந்து விட்டது, 40% சதவீதத்திற்கும் கீழ் வந்து விட்டது. அப்படி இருக்கும்போது மூச்சு விடுவதில் சிரமம் அதிகமாக இருக்கும். இங்கு வருவதற்கு முன்பு அவரை பார்க்கும் போது, அவரால் படுக்க முடியாது, படுத்துவிட்டால் மிகவும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். இரவில் தூங்கி கொண்டு இருக்கும் போது சட்டென்று மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு ஏழுந்து கொள்வார். அது மட்டும் இல்லாமல், ஒரு 2 நிமிடம் கூட அவரால் நடக்க முடியாது, மூச்ச விடுவதில் சிரமம் ஏற்படும்,  நிலையில் தான் இங்கு வந்து இருந்தார். அதன் பின் இந்த (eecp) சிகிச்சையை ஆரம்பித்து இப்பொழுது ஒரு.... 30 நாள் சிகிச்சை முறையை முடித்துவிட்டார். இப்பொழுது சிகிச்சை ஆரம்பித்த முதல் 10, 15 நாள்களிலேயே அவருக்கு முன்னேற்றம் (improvement) தெரிய ஆரம்பித்தது. அதாவது நடைப்பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்தார். 2 நிமிடம் தான் நடைப்பயிற்சி மேற்கொள்ள முடிந்தவரால் தற்போது ஒரு 15 நிமிடம் கூடுதலாக நடைப்பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்தார். அதன் பின் இரவில் நன்றாக தூக்கம் வர ஆரம்பித்து விட்டது, நன்றாக தூங்கி ஏழுந்து வந்தார். அதன் பின் ஒரு 15 ல் இருந்து 20 நாள்களுக்கான சிகிச்சை முறையை எடுத்துக்கொண்ட பிறகு அவரால் நன்றாக நடைப்பயிற்சி மேற்கொள்ள முடிந்தது. முதலில் அவருக்கு என்ன பிரச்சனை என்றால் பசி மட்டும் இல்லை, ஆனால் மூச்சு விடுவதில் சிரமம் எல்லாமே குறைந்து விட்டது. ஒரு 15, 20 நாள் சிகிச்சை முடிந்த பிறகு ஒரு 45 நிமிடம் எந்த தொந்தரவும் இல்லாமல் நடைப்பயிற்சி மேற்கொள்ள முடிந்தது. அது மட்டும் இல்லாமல் நன்றாக பசி எடுக்க  ஆரம்பித்து விட்டது, அதன் பின் மூச்சு விடுவதில் சிரமம் எதுவுமே கிடையாது, நன்றாக இருக்கிறார் இங்கு சிகிசைக்கு வருவதற்கு முன்பு இவருக்கு என்ன பிரச்னை என்றால், முதலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் ஏன்னென்றால் இருதயத்திற்கு ரத்த ஓட்டம் மிகவும் குறைவாக இருந்தது. அதனால அவர் இருதயத்தின் உடைய செயல் திறனை (pumping function) அளவிடும் echo பரிசோதனையை  எடுத்து பார்க்கும் போது அந்த (pumping function) மிகவும் குறைவாக இருந்தது,  நீர் அவரது உடலில் பல இடங்களில் தேங்க ஆரம்பித்து விட்டது. இப்பொழுது நீர் நுரையிரலில் (lungs)  இருக்கும் போது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும், படுத்தால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும், அதன் பின் வயிற்று பகுதியில் நீர் அதிகமாக இருந்ததினால் அவருக்கு பசி எடுக்கவில்லை. கொஞ்சமாக சாப்பாடு எடுத்துக்கொண்டாலே வயிறு நிறைந்து விட்டது போல் தெரியும். அதன் பின் கால் பகுதியில் வீக்கம் இது எல்லாமே இருந்தது. இப்பொழுது (eecp) சிகிச்சையை முடித்துவிட்டு நன்றாக இருக்கிறார், இப்பொழுது 32 நாள் சிகிச்சை முடிவில் ஒரு 1/2 மணி நேரம் அவரால் தனியாக நடைப்பயிற்சி மேற்கொள்ள  முடிகிறது. இந்த சிகிச்சையை முடிப்பதற்கு முன்பு அவர் வீட்டில் இருந்து எல்லாருமே அவர் உடன் வந்து இருந்தார்கள். ஆனால் இந்த 32 நாள் சிகிச்சையின் போது அவரே தனியாக வந்து சிகிச்சையை  எடுத்துவிட்டு போகிறார். இப்பொழுது வழக்கமாக இங்கு வருகின்ற நோயாளிகள் நிறைய பேருக்கு (echo)  அதாவது இதயத்தினுடைய செயல் திறன் (heart pumping function) மிகவும் குறைவாக இருக்கும்.(eecp) சிகிச்சை முடியும்போது வழக்கமாக (echo) பரிசோதனை செய்யும்போது  நிறைய பேருக்கு அந்த பரிசோதனையில் முன்னேற்றம் EF நோயாளியின், அது மட்டும் இல்லாமல் அதன் பின் வாழ்க்கை தரம் என்று சொல்லுவோம், அதுதான் மிகவும் முக்கியமானது, ஒரு 2 நிமிடம் தான் நடைப்பயிற்சி மேற்கொள்ள முடிந்தவர்களால் இந்த (eecp) சிகிச்சைக்கு பிறகு ஒரு 1/2 மணி நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்ள முடிந்தாலே அவர்களுடைய இருதயத்திற்கு ரத்த ஓட்டம் அதிகமாகிவிட்டது என்பது தெரிய வரும். இப்பொழுது இவருக்கு சிகிச்சை முடியும்போது  (echo) பரிசோதனையை பார்த்துவிட்டு மருந்துகள் (medicine) மறுபடியும் சரிபார்ப்போம் இப்பொழுது இவர் சிகிச்சையை ஆரம்பித்ததிலிருந்து இப்பொழுது வரைக்கும் உடல் எடை 5 kg வரை குறைந்து விட்டார். அது மட்டும் இல்லாமல் சில மாத்திரைகளை இப்பொழுதே குறைத்துவிட்டோம். அதனால் முடியும் போது மாத்திரைகளை மாற்றி கொடுத்துவிட்டு வழக்கமான உடற்பயிற்சி (regular excercise), (echo) பரிசோதனை எல்லாம் செய்துவிடுவோம். இப்பொழுது இந்த (vaso meditech eecp center / Heal your heart - vaso meditech eecp center advance heart failure treatment program). இது எப்படி இதய நோயாளிகளுக்கு அதாவது இதய செயல் இழப்பு நோயாளிகளுக்கு எப்படி உபயோகமாக இருக்கிறது என்றால் இப்பொழுது இதய செயல் இழப்பு நோயாளிகளுக்கு(i)மிகவும் முக்கியமானது இதயத்தினுடைய (pumping efficiency) மிகவும் குறைவாக இருக்கிறது. இப்பொழுது நீங்கள் இந்த eecp சிகிச்சையில் பார்த்தீர்கள் என்றால் இந்த ரத்த ஓட்டத்தை இருதயத்திற்கு அதிக படுத்துவதன் மூலம் நிறைய சிறு சிறு கிளை ரத்த நாளங்களை உருவாக்குவதனால் சாதாரணமாக (normal) செல்கிற ரத்த ஓட்டத்தை விட கொஞ்சம் அதிகமான ரத்த ஓட்டம் இதயத்தினுடைய தசைகளுக்கு செல்லும். அப்படி அதிகமாக செல்லும்போது இதய தசைகள் முன்பை விட கொஞ்சம் அதிகமாக விரிவடையும் ஆகும்.

அதனால் (pumping function marginal) லா 10 to 15% முன்னேற்றம் ஆகும். இந்த அளவிற்கு pumping function முன்னேற்றம் ஆனாலே நோயாளிகளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் (significant improvement) இருக்கும். அதாவது இது வரைக்கும் நிறைய முன்னேற்றம் பார்த்து இருக்கோம், சிகிச்சைக்கு வருவதற்கு முன்பு ஒரு 2 நிமிடம் கூட அவர்களால் நடைப்பயிற்சி மேற்கொள்ள முடியாது. சில நோயாளிகளுக்கு வேகமாக பேசினாலே மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். அந்த மாதிரி நோயாளிகளுக்கு இந்த (eecp) சிகிச்சையின் ஒரு 20 நாள் சிகிச்சை போகும் போதே அவர்களால் தைரியமாக 1 கிலோ மீட்டர், 2 கிலோ மீட்டர் வரை மூச்சு விடுவதில் சிரமம் இல்லாமல் நடைப்பயிற்சி மேற்கொள்ள முடிகிறது, மேலும் அவர்களுடைய இயல்பான செயல்களை (routine activity)  செய்ய முடிகிறது, கொஞ்சம் எடையை தூக்குவது, குளித்தால் மூச்சு விடுவதில் சிரமம் குறைவது, இவை எல்லாவற்றையும் ஒரு 15 ஆம் நாள் சிகிச்சை முடிவிலேயே அடைய முடிகிறது. இதற்கு காரணம் ரத்த ஓட்டம் அதிகமாகிறது. இரண்டாவது இந்த மாதிரி இதய செயல் இழப்பு நோயாளிகளுக்கு சிறுநீர் வெளியேற்றும் தன்மை மிகவும் குறைவாக இருக்கும், அது மட்டும் இல்லாமல் சிறுநீர் வெளியேற்றும் தன்மை குறைவாக இருப்பதன் காரணமாக சிறுநீரகத்தின் செயல் திறனும் (kidney function) பாதிப்பு அடைந்திருக்கும். அதனால் சிறுநீரத்தில் உள்ள உப்பின் அளவும் (urea creatinine) மிகவும் அதிகமா இருக்கும். இப்பொழுது (eecp) சிகிச்சை கொடுக்கும் போது என்ன செய்கிறோம் என்றால் அந்த ரத்த ஓட்டத்தை இருதயத்திற்கு  மட்டும் அல்லாமல், இந்த சிறுநீரகத்திற்கும் (kidney) அதிக படுத்துகிறோம். அப்படி செய்யும் போது சிறுநீர் வெளியேற்றும் தன்மை (urinary output), அதாவது சிறுநீரகத்தினுடைய (kidney) சிறுநீர் வெளியேற்றும் தன்மை முன்னேற்றம் (improve) ஆகும். அப்படி சிறுநீரகத்தினுடைய (kidney) சிறுநீர் வெளியேற்றும் தன்மை (urinary output) அதிகரிக்கும் (increase) போது அவங்களுடைய அந்த இடை கூடுதல் சரி ஆகும். அதனால் இந்த (eecp) சிகிச்சையை கொடுக்கும் போது நோயாளிகளுக்கு ஒரு 4 to 5 kg வரை முதல் வாரத்திலேயே குறைக்கிறார்கள் காரணம் சிறுநீர் வெளியேற்றும் தன்மை (urinary output) அதிகரிக்கிறது இதயத்தினுடைய சுருங்கும் தன்மை (heart contraction) முன்னேற்றம் (improve) ஆகிறது. அப்பொழுது நிச்சியமாக பலன்கள் கிடைக்கும். மூன்றாவது வகையில் இந்த (eecp) சிகிச்சை எப்படி செய்கிறது என்றால், இது ரத்த ஓட்டத்தை உடலில் இருக்கின்ற எல்லாம் பாகங்களுக்கும் அதிகரிக்கும் போது எந்தெந்த பாகத்திற்கு, ரத்த ஓட்டம் போகவில்லையோ அங்கெல்லாம் இயல்பாகவே இந்த (eecp) சிகிச்சையின் போது ரத்த ஓட்டம் அதிகமாகும். அப்படி ரத்த ஓட்டம் அதிகமாகும்போது நோயாளிகள் உடல் நிலையில் முன்னேற்றம் காண்பார்கள் அதாவது அந்த வாழ்க்கைத்தரம்  (quality of life) என்று சொல்லுவோம், அந்த tiredness, easily Feticablity. இந்த இதய செயல் இழப்பு) நோயாளிக்கு என்ன ஆகும் என்றால் சின்ன வேலைகள் செய்தால் கூட சோர்வு அடைந்து விடுவார்கள். ஒரு 15 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொண்டுவிட்டு  வந்தாலே ஒரு 4 கிலோ மீட்டர் நடைப்பயிற்சி மேற்கொண்டுவிட்டு வந்த சோர்வு தன்மை (tiredness) இருக்கும். இந்த (eecp) சிகிச்சை முறையில் அந்த  fatigability எல்லாமே நன்றாக குறைந்து விடும். அதனால்  இந்த வகையில் (eecp) சிகிச்சை முறை பல வகையில் இதயத்தின் செயல் திறனை (heart function) முன்னேற்றம் அடைய செய்து அந்த இதய செயல் இழப்பு நோயாளிகளினுடைய இதய நோய் அறிகுறி  எல்லாவற்றையும் நன்றாக குறைத்துவிடும்.

நோயாளி திரு. ரேஷன் ஜெய சூர்யா பற்றி மருத்துவர் S. ராமசாமி அவர்களின் கருத்து:

நோயாளி திரு. ரேஷன் ஜெய சூர்யா, இவருக்கு 50 வயது ஆகிறது. ஸ்ரீலங்காவில் இருந்து வந்து இருக்கிறார், இவர் ஒரு ஆசிரியர், இவருடைய பிரச்சனை என்னவென்றால் இவருக்கு  (2004) ஆம் ஆண்டு நெஞ்சு வலி ஏற்பட்டது. பின்னர் அவருக்கு இதயத்தில் பிரச்சனை இருப்பதை கண்டுபிடித்தார்கள். அதன் பின் அவர் மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டிருந்தார் அந்த இதய மாத்திரைகளை கடந்த ஒரு 14 வருடமாக எடுத்துக்கொண்டு இருக்கிறார். இப்பொழுது 2018 ஆம் ஆண்டு சட்டென்று  அவருக்கு மறுபடியும் மூச்சு திணறல் அதிகமாக ஏற்பட்டது. மூச்சு திணறல் அதிகமாக ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு உடனே (echo) பண்ணி பார்த்ததில் இதய செயல் திறன் 25 to 30% தான் இருந்தது. அதனால் இதய செயல் திறன் மிகவும் வேகமாக குறைந்துவிட்டது. அதனால்  தான் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருக்கிறது என்று அறிந்தார்கள்.பின்பு மருத்துவர்கள் சரி என்று சொல்லி angiogram பரிசோதனை செய்தார்கள். அப்படி (angiogram) செய்து ரத்த குழாயில் அடைப்பு இருந்தும் இதய செயல் திறன்  (heart function) மிகவும் மோசமா இருந்ததினால் அவருக்கு எந்த ஒரு அறுவை சிகிச்சையோ (bypass surgery), அஞ்சியோபிளாஸ்ட்டி (angioplasty) சிகிச்சையோ எதுவுமே பண்ண முடியாது என்று மாத்திரைகளை (medication) மட்டும் கொடுத்தார்கள். அதனால் ஒரு 2 மாதம் வரை நோயாளி திரு. ரேஷன் ஜெய சூர்யா அவர்கள் மாத்திரைகளை (medication) மட்டும் எடுத்துக்கொண்டார். ஆனால் அவருடைய மூச்சு விடுவதில் சிரமம் மட்டும் (symptoms) கொஞ்சம் கூட முன்னேற்றம் அடையவில்லை. (Eecp) சிகிச்சைக்கு வருவதற்கு முன்பு அவரால் குறைந்தபட்சம் 1 நிமிடமோ, 2 நிமிடமோ கூட நடக்க முடியாது.

இரவில் அவரால் தூங்க முடியாது. படுத்த உடனே மூச்சு விடுவதில் சிரமம் அதிகமாகிவிடும். அதனால் பெரும்பாலான நேரம் அவரால் உட்கார்ந்தே தான் தூங்க முடியும். உடம்பில் நீர் அதிகமாக இருப்பதினால் அவை நுரையீரலில் சென்று தேங்கிவிடும். இதய செயல் திறன் குறைவாக இருக்கும் போது இந்த மாதிரியான சிக்கல் (complication) ஏற்படுகிறது. அது மட்டும் இல்லாமல் பசி எடுப்பது சுத்தமாக கிடையாது. கூடுதலாக அவருடைய தினசரி நடவடிக்கைகள் அதாவது குளிப்பது, பல் துலக்குவது இது போன்ற சின்ன சின்ன செயல்கள் எதுவுமே செய்யமுடியவில்லை.இங்க வரும்போது இந்த எல்லா பிரச்சனைகளும் இருந்தது. அதன் பின் நோயாளியை பரிசோதனை செய்துவிட்டு மறுபடியும் (echo) எடுத்து பார்த்ததில் அவருடைய இதய செயல் திறன் (heart function) மிகவும் குறைவாக இருப்பதை பார்த்தோம். அதன் பின் சில ரத்த பரிசோதனைகளை எல்லாம் எடுத்தோம். எடுத்த பிறகு  (eecp) சிகிச்சைகு அவர் தகுதி ஆனவர் என்பதை கண்டு பிடித்து அவரை (eecp) சிகிச்சையை எடுத்துக்கொள்ள  சொன்னோம். முதல் 5 நாள் சிகிச்சையின் போது மட்டும் கொஞ்சம் கஷ்டப்பட்டார். அவரால (eecp) சிகிச்சையின் மேஜையில் கூட ஏறி படுக்க முடியாது. படுத்த உடனே அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுவிடும். அதனால் நாங்கள் அவருக்கு கொஞ்சம் மருந்து மாத்திரைகளை மாற்றிவிட்டு மெதுவாக சிகிச்சையை கொடுக்க ஆரம்பித்தோம்., ஏன்னென்றால் இந்த மாதிரி இருதய செயல் இழப்பு நோயாளிக்கு (eecp) சிகிச்சை முறையை மிகவும் கவனமாக கொடுக்க வேண்டும். இதற்கு என்ன காரணம் என்றால் நம்முடைய  கால்களில் கொடுக்கக்கூடிய அழுத்தமானது மிகவும் அதிகமாகவோ, அல்லது மிகவும்  குறைவாகவோ கொடுத்தால் அந்த கால்களில் இருக்கின்ற இரத்த ஓட்டம் நுரையீரலுக்கு அதிகமாகிவிட்டது என்றால் (pulmonary odema) என்ற (complication) வரும். அதனால் கவனமாக அவருக்கு (eecp) சிகிச்சையை கொடுக்கும்போது (oxygen) கொடுப்போம். (oxygen saturation) அளவு எவ்வளவு ரத்தத்தில் இருக்கிறது என்பதை கண்காணித்துக்கொண்டே இருப்போம். அதனால் ஒரு 15, 20 நாள் முடிந்த பிறகு அவருக்கே தன்னம்பிக்கை ஏற்பட்டு விட்டது. இப்பொழுது கிட்டத்தட்ட ஒரு 25 நாளுக்குடைய சிகிச்சையை முடித்துவிட்டார். இப்பொழுது அவரால் 10 நிமிடம் இல்லை கிட்டத்தட்ட  1 மணி நேரம் எந்த வித பிரச்னையும் இல்லாம நடைப்பயிற்சி மேற்கொள்ள முடிகிறது. தூக்கமும் எந்த பிரச்னையும் இல்லாமல் வருகிறது. பசியும் சரி ஆகி விட்டது. அதனால் இந்த (eecp) சிகிச்சை மூலம் இருதயத்திற்கு ரத்த ஓட்டத்தை திடீர் என்று அதிகப்படுத்தி (increases) கொடுத்தினால் அவருக்கு இதய செயல் இழப்பினால்) வந்த எல்லா அறிகுறிகளும் (symptoms) சரி ஆகி இப்பொழுது மிகவும் நன்றாக இருக்கிறார்.     

E E C P  சிகிச்சை முறையை பற்றி மருத்துவர் S. ராமசாமி அவர்களின் உரையாடல்:    

(Eecp) Enhanced External Counter Pulsation அதாவது இது ஒரு non invasive சிகிச்சை முறை அறுவை சிகிச்சை இல்லாமல் இருதய நோயாளிகளுக்கு இருதயத்தின் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தக்கூடிய ஒரு சிகிச்சை முறை ஆகும். இது இபபோது சமீபத்தில் வந்து இருக்கின்ற  ஒரு நவீன சிகிச்சை முறை ஆகும். மேலும் இந்த சிகிச்சை முறையில்,  எந்த ஒரு அறுவை சிகிச்சையும் செய்யப்படுவதில்லை. அது மட்டும் அல்லமல் இந்த சிகிச்சை முறையை செய்துகொண்ட பிறகு இதை (out patient treatment) என்று சொல்லுவோம், அதாவது மருத்துவமனையில் தங்க வேண்டியது இல்லை. தினசரி 1 மணி நேரம் வீதம் 35 நாட்கள் இந்த சிகிச்சை முறைக்கு வரவேண்டும். 35 நாள் வந்த பிறகு மொத்தமாக இந்த சிகிச்சையின் உடைய நெறிமுறை (protocol) என்று சொல்லுவோம், 35 நாள் முடிந்த பிறகு இந்த சிகிச்சை முடிவடைகிறது. இப்பொழுது நாங்கள் என்ன சொல்ல போகிறோம் என்றால் இந்த சிகிச்சை எப்படி செய்யப்படுகிறது என்று. இப்பொழுது பார்த்தீர்கள் என்றால் நோயாளி ஒரு சிகிச்சை மேஜையில் படுக்க  வைக்கப்படுகிறார். இப்பொழுது கால்களில் காற்று பை (cuff) கட்டி இருக்கிறோம், அதாவது ரத்த அழுத்தம்(blood pressure cuff), நீங்கள்  ஒரு மருத்துவரின் கிளினிக்  சென்றீர்கள் என்றால் உங்கள் கையில் ரத்த அழுத்த காற்று பை (blood pressure cuff) காட்டுவார்கள், அதே மாதிரியான காற்று பைகள் (cuff) தான் நோயாளியின் கால்களில் கட்டி இருக்கோம். இது 3 ஜோடி காற்று பைகள் ஆகும்  2 கால்களிலும் ஒட்டி இடுப்பு பகுதியிலும் கட்ட பட்டு இருக்கின்றது. இந்த காற்று பையில் (cuff) அழுத்தம் அதாவது நீங்கள் ரத்த அழுத்த பரிசோதனை செய்யும் போது எப்படி அழுத்தம் (pressure) கையில் ஏற்படுகிறதோ அதே மாதிரி காற்று அழுத்தம் இந்த சிகிச்சையின் போது கால்களில் கொடுக்கப்படுகிறது. இந்த அழுத்தம் கால் பகுதியில் அலுத்துவதினால் கால் பகுதியில்  இருக்கற ரத்த ஓட்டத்தை இருதயத்திற்கு அதிகப்படுத்த முடியும். இந்த சிகிச்சை முறையின்  போது என்ன செய்கிறோம் என்றால் இந்த அழுத்தம்  கொடுக்கும் போது ரத்த ஓட்டம் இருதயத்திற்கு அதிகமாகிறது. இந்த சிகிச்சை முறையை தினமும் ஒரு மணி நேரம் வீதம் 35 நாட்கள் கொடுக்கும்போது என்ன ஆகும் என்றால் இயற்கையாகவே  அதாவது ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்த, அதிகப்படுத்த உங்களுடைய அடைப்புகளை சுற்றி புதிய ரத்த நாளங்கள் உண்டாகும். இதை தான் (collaterals) என்று சொல்லுவோம். அதாவது இயற்கையாகவே மனிதர்களுக்கு இதயத்தில் சிறு சிறு ரத்த நாளங்களின் சுழற்சி (collaterals circulations) இருக்கும்.

இப்பொழுது நிறைய பேர் "எனக்கு 80% அடைப்பு இருக்கிறது 90% அடைப்பு இருக்கிறது உடனடியாக  இதய தாக்குதல் ஏற்பட்டுவிடும்" என்று பயம் கொள்கிறார்கள். இருந்தாலும் இயற்கை  நமக்கு ஏற்கனவ முக்கியமான ரத்த நாளங்களில்  அடைப்பு ஏற்பட்டு  இருந்தாலும் அந்த முக்கியமான ரத்த நாளங்களை சுற்றி சிறு சிறு ரத்த நாளங்களின் சுழற்ச்சி (collaterals circulation) இயற்கையாகவே இருக்கிறது. இப்பொழுது எல்லாம் அடைப்புகளும் அதாவது 80% அடைப்பாக இருந்தாலும் சரி, 90% அடைப்பாக இருந்தாலும் சரி அவர்களுக்கு இதய தாக்குதல் (heart attack) வரும் என்றால் இப்பொது தமிழ் நாட்டில் 80% பேர் மருத்துவமனையில் தான் இருப்பார்கள். ஆனால் அப்படி நிகழ்வது கிடையாது. ஏனென்றால் இந்த சிறு சிறு ரத்த நாளங்கள் (collaterals) இயற்கையாகவே உருவாகிறது. இருந்தாலும் நோயாளிகளுக்கு அதிகமான கொழுப்பு சத்து, சர்க்கரை நோய், அதிக ரத்த அழுத்தம் உடல் எடை அதிகமாக இருத்தல், புகைபிடித்தல், மது பழக்கம் போன்ற அனைத்து (cardiac risk factor) இருந்தது என்றால் இந்த சிறு சிறு ரத்த நாளங்களின் வளர்ச்சி (collaterals formation) மிகவும் மெதுவாக உருவாகும்.அப்படி மெதுவாக உருவாகும் போது அவர்களுக்கு இருதய மாரடைப்பு வருவதற்கு வாய்ப்புகள்  அதிகமாக இருக்கும். இந்த (eecp) சிகிச்சை முறையின் மூலம் இயற்கையாகவே ரத்த ஓட்டம் அதிகப்படுத்தும் போது அந்த அடைப்பை தாண்டி புதிய ரத்த நாளங்கள் உருவாக ஆரம்பித்துவிடும். இதை தான் (natural bypass) என்று கூறுகிறோம். அப்படி உருவாகும் போது நோயாளிகளுக்கு 35 நாள் சிகிச்சை இருந்தாலும் ஒரு 15 நாள் சிகிச்சை முறை சென்று கொண்டிருக்கும் போதே அவர்களுடைய நெஞ்சு வலி குறைந்து விடும். அதனால் வழக்கமாக நோயாளிகளிடம்  கேக்கும் போது சொல்லுவார்கள், (doctor) நான் முதலில் வந்திருக்கும்போது 10 நிமிடம் கூட என்னால் நடைப்பயிற்சி மேற்கொள்ள முடியாது, ஏன்னென்றால் நெஞ்சு வலி அதிகமாக இருந்தது" என்று கூறினார். ஆனால் இந்த சிகிச்சையின் 15 வது நாள் முடிவிலேயே அந்த நோயாளியினால் ஒரு 1/2 மணி நேரமோ, 45 நிமிடமோ எந்த மாத்திரையும் உட்கொள்ளாமல்,  எந்த ஒரு நெஞ்சு வலியோ அல்லது எந்த ஒரு உபாதையும் இல்லாமல் நன்றாக நடைப்பயிற்சி மேற்கொள்ள முடியும். அதுதான் ரத்த ஓட்டம் அதிகமானதற்கு அறிகுறி ஆகும். அது மட்டும் இல்லாமல் இந்த சிகிச்சை முடிந்த பிறகு என்னென்ன செய்யவேண்டும் என்றால், இந்த சிகிச்சையின் மூலம் புதிய ரத்த நாளங்கள் உருவான பிறகு, அதாவது 35 நாள்கள் சிகிச்சை முடித்த  பிறகும் தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்  மேலும் கொழுப்பு சத்து, சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்தத்தின் அளவு இது போன்ற எல்லாம் (cardiac risk factor) யும் கட்டுப்பாடிற்குள் (control) வைத்திருந்தார்கள் என்றால் இந்த சிகிச்சையினுடைய பலன் பல ஆண்டுகள் வரை இருக்கும்.

Patient திரு.சமீர் பற்றி மருத்துவர் S. ராமசாமி அவர்கள் கூறும் கருத்து:

இவர் பெயர் திரு.சமீர், புவனேஸ்வரிலிருந்து இருந்து வந்து இருக்கிறார். கடந்த 1 வருடத்திற்கு முன்பு சிகிச்சைக்காக வந்திருந்தார். அவருக்கு பிரச்சனை என்னவென்றால் 1 வருடத்திற்கு முன்பு அவருக்கு இதய தாக்குதல்  (heart attack) வந்து இருந்தது. இப்பொழுது பார்த்தீர்கள் என்றால் அவருக்கு கொழுப்பு சத்து, சர்க்கரை நோய், பரம்பரை காரணமாக உள்ள இதய நோய் (family CAD history) எதுவுமே கிடையாது. ஆனால் வெகு நாட்களாக புகைபிடிப்பவர் (chronic smoker). அதனால் இதய தாக்குதல் (heart attack) ஏற்பட்ட உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இதய தாக்குதலுக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனால் உடனே (angiogram) பரிசோதனை செய்து எதனால் இதய தாக்குதல் வந்தது, எத்தனை ரத்த நாளங்களில் அடைப்பு இருக்கிறது என்பதை பார்ப்பதற்காக (angiogram) பரிசோதனை செய்தார்கள்.  (Angiogram) பரிசோதனை செய்து பார்த்ததில் அவருடைய முக்கிய ரத்த நாளங்கள் (main vessels), அதாவது  உங்களுடைய இருதயத்திற்கு ரத்த ஓட்டத்தை கொடுக்க கூடியது 3 ரத்த நாளங்கள் (LAD, LCX, RCA) என்று சொல்லுவோம். அதில் 2 ரத்த நாளங்களில் (critical lesion), ஒரு ரத்த நாளத்தில் 90%, இன்னொரு ரத்த நாளத்தில் மொத்தமாக 100% அடைப்பும் இருந்தது. அதனாலதான் இதய தாக்குதல் ஏற்பட்டு இருக்கிறது என்பது திட்டவட்டமாக உறுதியாகி (prove) இருந்தது. உடனே மருத்துவர்கள் மருந்து மாத்திரைகளை கொடுத்து 3 to 4 நாட்களுக்குள் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று கூறினார்கள். மேலும் அறுவை சிகிச்சைக்கு முன்பு (echo) எடுத்து பார்த்ததில் இதயத்தினுடைய  செயல் திறன் 34% சதவீதம் தான் இருந்தது. மோசமான இதய செயல் திறன் என்பதால் உடனே நோயாளியிடம் அறுவை சிகிச்சை செய்தாலும் இது (high risk procedure) என்று விளக்கம் கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் நோயளிக்கு அறுவை சிகிச்சை செய்வதில் விருப்பம் கிடையாது. அதனால் அவர் எனக்கு அறுவை சிகிச்சை வேண்டாம், எனக்கு மருந்து மாத்திரையையே கொடுங்கள் என்று சொல்லி வற்புறுத்தியதால் மருத்துவர்கள் மருந்துகள் எல்லாம் கொடுத்து இருக்கிறார்கள். ஆனாலும் அவரால் கொஞ்சம் கூட நடைப்பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை, மூச்சு விடுவதில் சிரமமும் அதிகமாகிவிட்டது, உடனே அவரே வலைத்தளத்தில் (eecp) சிகிச்சையை தேடி தேர்வு செய்து சென்னைக்கு வந்து என்னை பார்த்தார்.

பார்க்கும் போது மறுபடியும் அந்த (angiogram report) எல்லாம் வாங்கி பார்த்தோம். அவருடைய (echo) பரிசோதனையும் திரும்ப பரிசோதித்து பார்த்தோம். பார்த்ததில் (echo function) மிகவும் மோசமாக இருந்தது. 30 to 33% தான் இருந்தது. அதே மாதிரி 2 ரத்த நாளங்களிலும் அடைப்பு மிகவும் மோசமாக இருந்தது. நோயாளியால் கொஞ்சம் நேரம் கூட நடைப்பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை, நெஞ்சு வலி அதிகமாகவே இருந்தது. இந்த மாதிரி நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியாது, இல்லையென்றால் "என்னால் செய்துகொள்ள முடியாது என்று நோயாளியே கூறிய பிறகு அவர்களுக்கு இந்த (eecp) சிகிச்சையை  மட்டும் தான் ஒரு ஒப்புதலான சிகிச்சை முறை ஆகும். அதனால் அவருக்கு (eecp) சிகிச்சை முறையை கொடுக்க ஆரம்பித்தோம்.ஆரம்பித்த பிறகு ஒரு 15 to 20 நாட்கள் சிகிச்சை முறையிலேயே முன்னேற்றம் இருந்தது. 35 நாள் சிகிச்சை முடிவில் நோயாளிக்கு (symptomatic)அதாவது நெஞ்சு வலி, மூச்சு விடுவதில் சிரமம் அவை எல்லாம் நன்றாக குறைந்து அவரால் 45 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொள்ள முடிந்தது. இவ்வளவு முன்னேற்றம் இருப்பதன் காரணமாக நாங்கள் திரும்பவும் (echo) பரிசோதனை செய்து பார்த்தோம். பார்த்ததில் அவருடைய (echo EF) 35% சதவீதத்தில் இருந்து 65% சதவீதமாக முன்னேற்றம் அடைந்து இருக்கிறது. இது ஒரு (huge improvement) வழக்கமாக (eecp) சிகிச்சை முறை, அதாவது இருதய செயல் இழப்பு இருதய செயல் திறன் குறைவாக ஆகிவிட்டது என்றால் ஒரு 10% இல்லையென்றால் 15% வரையும் நம்முடைய  இதயத்தினுடைய (pumping function improve) ஆகும் என்று நோயாளிகளிடம் சொல்லுவோம். அதை  பெரும்பாலும்  எல்லாம் நோயாளிகளும் அந்த முன்னேற்றத்தை  அடைகிறார்கள்.10 to 15% சதவீதம் முன்னேற்றம் அடைந்தாலே அவங்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் குறைந்துவிடும், மாத்திரைகளை குறைத்து விடலாம்,வழக்கமான நடைபயிற்சியை (regular walking) மேற்கொள்ள முடியும், நன்றாக தூக்கம் வருவது இவை எல்லாமே அவர்களுக்கு கிடைத்து விடும். இந்த நோயாளியை பார்த்தீர்கள் என்றால்,  42 வயது தான் அவருக்கு ஒரு 35% சதவீதத்தில் இருந்து 42% கூட இல்லை 45% இருந்தாலும் ஒரு 42 வயதில் ஒரு (active life style) வாழ்வார்கள். அதாவது வெகு தூரம் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும், வேகமாக ஓட வேண்டும், நிறைய வேலைகள் செய்யவேண்டும். அப்படி இருக்கும் போது அவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சு வலி வரலாம், ஆனால் இந்த நோயாளிக்கு Huge ஆ 33% சதவீதத்தில் இருந்து 65% சதவீதம் வரையும் EF முன்னேற்றம் அடைந்து இருக்கிறது. இது (normal heart function). அதனால் ஒரு (highly abnormal heart function) ல் இருந்து இந்த நோயாளிக்கு (normal heart function) வந்து இருக்கிறது.

நோயாளி Mr. சமீர் அவர்கள் eecp சிகிச்சையை பற்றி கூறும் கருத்து:      

நான் சமீர் பதி, 42 வயது ஆகிறது, ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து வந்துள்ளேன். டிசம்பர் 31, 2016 இரவு 9 மணி இருக்கும் நண்பர்களுடன் நான் ஒரு விழாவில் பங்கேற்க தயார் ஆகி கொண்டிருந்தேன். அபோது என் மார்பில் வலி ஏற்பட்டது, வலி படிப்படியாக அதிகரித்தது, அப்போது நான் புவனேஸ்வரில் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். மேலும் நான் (angio gram) செய்து கொள்ள உட்படுத்தப்பட்டேன்.இறுதியாக என் 2 இருதய இரத்த நாளங்களிலும் அடைப்புகள் இருப்பதை கண்டறிந்தனர், ஒன்று 90% மற்றொன்று 100%. doctor எனக்கு (bypass) அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தினார். நான் உட்கார்ந்து இருந்தேன், (bypass) அறுவை சிகிச்சை (vedio) வை இணையத்தில் தேடினேன், அது எவ்வாறு செய்யப்படுகிறது என்பதை அறிய தேடினேன். உண்மையில் நான் அப்போது (eecp) பற்றி அறிந்தேன். அதாவது புதுமையான சிகிச்சை செயல்முறை, இயற்கை (bypass) போலவே இருந்ததை அறிந்தேன். பின்னர் நான் விக்கிபீடியாவைப் பின்தொடர்ந்தேன். விக்கிபீடியாவில் நான் படித்த அனைத்தும் நம்பிக்கை தந்தது. இது போன்ற வகையான தொழில்நுட்பம் என் இதயத்தில் வேலை செய்ய முடியும் என்று நான் நம்பிக்கையோடு இருந்தேன். நான் என் அருகே உள்ள (eecp) மையத்தை தேடினேன். அதனால் அருகிலுள்ள சென்னை தான் எனக்கு கிடைத்தது.பிறகு நான் (Heal Your Heart eecp) மையம் வந்தேன், குணமடைய மருத்துவர் ராமசாமி அவர்களிடம் ஆலோசனை பெற்றேன். 10 அல்லது 15 நாட்கள் என் சிகிச்சையின் பிறகு, நான் அறுபுதங்கள் அனுபவித்தேன். உண்மையில் இந்த சிகிச்சை எடுக்கும் முன், நான் 5 நிமிடங்கள் கூட நடக்கமுடியவில்லை. சிகிச்சையின் போது 10 நாள்கள் கழித்து, நான் இங்கு வந்தபோது ஒரு சிகிச்சை நடந்து கொண்டிருந்தது, எனக்கு இடமில்லை. என் மருத்துவர் கடற்கரைக்குப் போய் சற்று நேரம் கழித்து நீங்கள் திருப்பி வரலாம் என்று சொன்னார், மற்றும் அவர், கடற்கரை அருகில் உள்ளது, 2 நிமிட நடைபயிற்சி என்று சொன்னார். அனால் நான் கடற்கரை அடைந்தபோது அது 2 கிலோ மீட்டர் ஆக இருந்தது. என் மருத்துவர் என்னை அழைத்தார், நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டார். நான் வருகிறேன், 2 நிமிட இடைவெளி மட்டும் தன என்று நீங்கள் சொன்னீர்கள், அனால் இது 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது என்று நான் சொன்னேன். சரி கவலைப்படாதே என்று மருத்துவர் சொன்னார், சாதாரணமாக நடந்து சென்று திருப்பி வந்தேன். அந்த நாள், என்னால் 2,3,4 அல்லது 5 கிலோ மீட்டர் நடக்கமுடியும் என் உணர்ந்தேன். நான் என் உடல் திறனை திரும்ப பெற்றதை உணர்ந்தேன்.

அன்றுதான் மருத்துவர் ராமசாமி மிகவும் திறமையான மருத்துவர் என உணர்ந்தேன். இந்த சிகிச்சையின் பின்னர் எனது ஊருக்குச் சென்றேன், 2 மாதங்கள் கழித்து நான் திருப்பி வந்தேன். சென்னை மருத்துவமனையில் (nuclear perfusion scan) செய்தேன், அந்த மருத்துவர் என் உடல்நிலை இருமடங்கு தேரியுள்ளது என்றார். எனவே உங்கள் இதயம் இபோது 30 வயதில் உள்ள ஒரு மனிதனை போல் உள்ளது என்றார். இப்போது நான் நன்றாக உணருகிறேன். சமீபத்தில் நான் (echo) பரிசோதனை செய்துகொண்டேன், என் இதயம் செயல்படும் வீதம் 60% ஆகும். இது சாதரண வரம்பு மக்களுக்கு இருக்க வேண்டும் என மருத்துவர் சொன்னார். நான் டாக்டர் ராமசாமி மற்றும் (Heal Your Heart நிறுவனத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன்).

Eecp சிகிச்சை பற்றிய கண்ணொளி செய்தி:

(Eecp) சிகிச்சை, இருதய நோய்களுக்கு அறுவை சிகிச்சை செய்துகொள்ள பயப்புடுபவர்கள் அல்லது ஏற்கனவே (bypass) அறுவை சிகிச்சை, (Anjiogram) சிகிச்சை செய்துகொண்டு பலன் இல்லாதவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் அளவிற்கு போதிய உடல் பலம் இல்லாதவர்களுக்கு ஏற்ற ஒரு சிகிச்சை தான் eecp.