Home | Transcriptions of Videos

Shocking Results of Angioplasty Research: ORBITA TRIAL

Download Interview Transcript (Tamil)

முன்னுரை

அதாவது வந்து இப்ப வந்து angio plasty என்பது வந்து எல்லா patient கும் பண்ணிக்கிட்டு இருக்காங்க. இப்ப recent ஆ வந்து ORBITA TRIAL அதாவது வந்து ஒரு investigation ஆராய்ச்சி வந்து பண்ணி இருந்தாங்க in londan. அந்த ஆராய்ச்சி கட்டுரை வந்து ஒரு மிக பெரிய உண்மையை வந்து மக்களுக்கு வந்து உணர்த்தி இருக்கு. அது வந்து இப்ப எல்லா cardiologist கும் தெரியும், இருந்தாலும் இந்த ORBITA TRIAL உடைய result வந்து ஒரு normal patient அதாவது ஒரு doctor கு இல்ல, ஒரு patient இந்த trail மூலம் என்ன information போயி சேர வேண்டும் என்பதை நான் இப்ப சொல்றேன். அதாவது இப்ப வந்து என்ன பண்றேங்க medicine வந்து சாப்பிடுறீங்க, நாம medicine சாப்பிட்டபிறகு நெஞ்சு வலி இன்னும் கம்மி ஆகல, அப்ப என்ன பன்றாங்க doctor வந்து உங்களுக்கு medicine வந்து almost 6 மாசம் கொடுத்துட்டோம் இருந்தாலும் உங்க நெஞ்சு வலி வந்து அதே மாதிரி தான் இருக்கு, அது மட்டும் இல்லாமல் உங்களுக்கு already வந்து 2, 3 vessels ல block இருக்கறதுனால வந்து இப்ப angio plasty பண்ணத்தான் உங்களுக்கு அந்த நெஞ்சு வலி வராம இருக்கும், நிறைய தூரம் நடக்க முடியும் அப்படி னு சொல்ராங்க. அது வந்து fact, ஏன்னா ஒரு angio plasty என்பது வந்து vessels ல open பண்ண உடனே ரத்த ஓட்டம் அதிகமாக போகுது, definite ஆ நமக்கு நெஞ்சு வலி கம்மி ஆகிவிடும், அதுக்கப்பறம் heart attack risk கம்மி ஆகிவிடும், நல்லா நடக்கலாம் என்பதை எல்லா patient உம் நம்பிட்டு treatment எடுக்கறாங்க. இப்ப இந்த fact அ தான் ORBITA TRIAL என்பது வந்து ஒரு ஆராய்ச்சி மூலம் trail பண்ணாங்க. அதாவது என்ன பண்ணாங்க வந்து 2 group of patient. 1 group of patient கு வந்து medicine மட்டும் கொடுத்தாங்க. ஆனால் அவங்களுக்கு angio plasty பண்ண போறோம் னு சொல்லிட்டு அந்த operation theatre கு கொண்டுபோயிட்டு body உள்ள catheter உம் அனுப்பினார்கள் ஆனா stent பண்ணல. ஆனா patient கு என்ன தெரியும் னா நமக்கு angio plasty பண்ணிட்டாங்க னு. treat பண்ண doctor கும் தெரியாது, அந்த patient கு தெரியாது உங்களுக்கு angio plasty பண்ணல என்ற விஷயம். இன்னொரு group வந்து அதே மாதிரி medicine நும் கொடுத்து angio plasty யும் பண்ணி முடித்துவிட்டர்கள். அப்படி பண்ணி முடிச்ச பிறகு இந்த 2 group யும் 6 வாரம் வரை follow பண்ணிட்டு என்ன result னு பார்க்கறாங்க. நீங்க வந்து ஒரு patient ஓ doctor ஓ எல்லாரும் என்ன நம்புவோம் னா எந்த patient கு நாம angio plasty பண்ணி இருந்தோமோ அவங்க definite ஆ நல்லா இருப்பாங்க, எந்த patient கு angio plasty பண்ணவில்லையோ அவங்களுக்கு இன்னும் நெஞ்சு வலி இருக்கும், இதுதான் நம்ம நினைச்சிட்டு அந்த trail அ பண்ணது. ஆனால் ரிசல்ட் எப்படி  வந்தது என்றால் இரண்டு  குரூப்பும்  similer ஆக தான் இருந்தாங்க. அதாவது வந்து நெஞ்சு வலியோ அதிக தூரம் நடக்க முடியும் என்பதையும், குவாலிட்டி of life  ஓ இரண்டு குரூப்லயும் same  ஆகதான் இருந்தது. எந்தவித difference  ம்  2 குரூப்லயும் கிடையாது. அப்படி இருக்கும் பட்சத்தில் அடுத்த கேள்வி என்னவென்றால், அப்புறம் எதற்காக எனக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி செய்தார்கள்? இப்பொழுது இதுதான் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. அதாவது ஒரு ஆஞ்சியோ பிளாஸ்டி பண்ணாலும் ஒரு cardiologist வந்து உங்க கிட்ட வந்து, நீங்க வந்து ஒரு ஆஞ்சியோ பிளாஸ்டி பண்ணி முடிச்சிட்டீங்க அதனால உங்களுக்கு வந்து நெஞ்சு வலி குறைந்துவிடும் நீங்க நிறைய தூரம் நடக்கலாம் உங்களுக்கு வந்து முன்னாடி மாதிரி வந்து அந்த சோர்வு எதுவும் இருக்காது, நல்லா இருப்பீங்க என்பதை வந்து சொல்ல முடியாது. இதற்கு காரணம் இரண்டு தான் இருக்க முடியும் ஒன்னு வந்து ஆஞ்சியோபிளாஸ்டி பண்ணாலும் எந்த ஒரு நன்மையும் அந்த Patient க்கு போய் சேரவில்லை, இல்லையென்றால் மெடிக்கல் மேனேஜ்மென்ட் அதாவது மெடிசன்  சாப்பிடுவதே சாப்பிடுவதே வந்து very very superior. அதற்கு மேலே என்ன பண்ணாலும் அதே Result தான் இருக்கும் என்பது இந்த ஆய்வுக் கட்டுரையின் மூலம் தெரிய வருகிறது.