Home | Transcriptions of Videos

வாசோ மெடிடெக் EECP சிகிச்சை முறையில் என்ன நடக்கிறது?

Download Interview Transcript (Tamil)

முன்னுரை

இந்த (eecp) சிகிச்சை முறையில் நோயாளிகளின் (eecp) இயந்திர மேஜையில் படுக்க வைக்க படுகிறார்கள். நோயாளிகளின் கால்களில் அதாவது இடுப்பு பகுதி, தொடை பகுதி மற்றும் கெண்டை கால் சதை பகுதிகளில் 3 காற்று பைகள் கட்ட படுகின்றன. அந்த நோயாளின் ECG அந்த இயந்திரத்தின் கணினியுடன் இணைக்கப்பட்டிருக்கும். அதனால் அந்த நோயாளியினுடைய ECG கு ஏற்றார் போல் அவர்களுடைய கால்களில் இருக்கக்கூடிய காற்று பைகள் (inflate,deflate) அதாவது அழுத்தம் கொடுத்து (compress) கால் பகுதியில் இருக்கின்ற  ரத்த ஓட்டத்தை இருதயத்திற்கு அதிகப்படுத்துகிறது. இந்த சிகிச்சை முறையை 1 நாளைக்கு 1 மணி நேரம் வீதம் 1 வாரத்திற்கு 6 நாள்கள் வீதம் 6 வாரங்கள் 35 நாள்கள் கொடுக்கப்படுகிறது. அப்படி கொடுப்பதினால் ரத்த ஓட்டமானது (consent) சீராக இதயத்திற்கு அதிகமாகிறது. அப்படி ரத்த ஓட்டத்தை இருதயத்திற்கு அதிகப்படுத்தும் போது இயற்கையாகவே உங்களுடைய இருதயத்தில் சின்ன சின்ன ரத்த நாளங்கள் இருக்கும். அந்த ரத்த நாளங்கள் இதன் மூலம் பெரிதாக்கப்படுகிறது. மேலும் அந்த ரத்த ஓட்டம் அதிகப்படுத்துவதினால் புதிய ரத்தநாளங்கள் அதாவது அந்த அடைப்பை சுற்றி புதிய ரத்த நாளங்கள் உருவாக்கி அந்த ரத்த நாளங்கள் வழியாக எந்தெந்த இடத்திற்கு ரத்த ஓட்டம் குறைவாக இருக்கிறதோ அங்கெல்லாம் ரத்த ஓட்டம் போக ஆரம்பிக்கிறது. அந்த ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தியதன்  பிறகே நோயாளிகளுக்கு அந்த சிகிச்சையின்  பலன் கிடைக்க ஆரம்பித்து விடுகிறது. மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சு வலி, சோர்வு தன்மை நடைப்பயிற்சி மேற்கொள்ள முடியாமல் இருப்பது, சின்ன சின்ன வேலைகள் செய்தால் கூட சோர்வு அடைவது இது எல்லாமே கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கிறது. 35 நாள்கள் இந்த சிகிச்சை முறையை முடித்த உடனே அந்த ரத்த ஓட்டம் இருதயத்திற்கு, சிகிச்சைக்கு முன்பு இருந்ததை விட மிக அதிகமாக கொடுக்கப்படுகிறது. அப்படி இருக்கும் போது இருதய தசைக்கு ரத்த ஓட்டம் அதிகமாவதனால் அவர்களுடைய (pumping function) முன்னேற்றம் அடைந்து நோயாளிகளினுடைய (quality of life) என்று சொல்லுவோம், அதாவது முன்பெல்லாம் அவர்களால் சிறு சிறு வேலைகளை கூட செய்ய முடியாது அவை எல்லாம் நிவர்த்தி ஆகி அவர்களால் நன்றாக நடைப்பயிற்சி மேற்கொள்ள முடியும், நெஞ்சு வலி இல்லாமல் பல வேலைகளை செய்ய முடியும்.