Home | Transcriptions of Videos

முன்னெச்சரிக்கையாக இந்த வாசோ மெடிடெக் EECP சிகிச்சை முறையை எடுத்துக்கொள்ளலாமா?

Download Interview Transcript (Tamil)

முன்னுரை

முன்பு நான் கூறியது போல் இதய நோய் உள்ளவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் தொடர்ச்சியான உடற்பயிற்சி, தொடர்ச்சியான (jogging), தொடர்ச்சியான நடைப்பயிற்சி இது போன்ற உடற்பயிற்சிகளை செய்யும்போது இருதயத்திற்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்த முடியும். இந்த (eecp) என்பது ஒரு வகையான (aggressive) உடற்பயிற்சி என்று கூறுவோம். இந்த உடற்பயிற்சி பண்ணும் போது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவது, ரத்த அழுத்தம் அதிகமாவது, இதய துடிப்பு அதிகமாவது அவை எல்லாம் இல்லாமல் ஒரு சிகிச்சை மேஜையில் படுத்துக்கொண்டு ஒரு இசையோ அல்லது தொலைக்காட்சியோ பார்த்து கொண்டிருக்கும் போது உங்கள் இருதயத்திற்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துவது மட்டும் இல்லாமல் உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் இந்த சிகிச்சையின் மூலம் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்த முடியும். அப்படி செய்யும் போது ஒரு முழுமையான உடற்பயிற்சி செய்யும் போது என்ன பலன் ஒரு நோயாளிக்கு கிடைக்கிறதோ அதே பலனை (eecp) சிகிச்சையின் போது திட்டவட்டமாக நோயாளிகளுக்கு கிடைக்கும். அதனால் இந்த சிகிச்சை முறையை ஒரு நோய் தடுப்பு முறையாக (prevention) நோயாளிகள் எடுத்துக்கொள்ளலாம்.