Home | Transcriptions of Videos

Published on Jun 17, 2019
திட்டவட்டமாக ஒரு (eecp) மையத்தில் (eecp) சிகிச்சையை கொடுக்கிறார்கள் என்றால் அவங்களுக்கு பயிற்சி (training) மிகவும் முக்கியம். அதற்க்கு காரணம் என்னவென்றால் இந்த eecp சிகிச்சை முறையை (micro second procedure) என்று கூறுவோம். அதாவது உங்களுடைய இருதய துடிப்பிற்கு ஏற்றார் போல் அந்த கால்களில் கட்ட பட்டு இருக்கின்ற காற்று பைகளை இயக்க வேண்டும். அதற்க்கு முறையான பயிற்சி தேவை. மேலும் ஒரு நோயாளிக்கு இருதய செயல் இழப்பு இருக்கிறது என்றால் அதற்க்கு ஏற்றார் போல் அந்த சிகிச்சை முறையை மாற்றி கொடுக்க வேண்டும். சில நோயாளிகளுக்கு இருதய செயல் இழப்பு இருக்காது ஆனால் இருதய ரத்த குழாயில் அடைப்பு இருக்கும். அவர்களுக்கு வேறு விதமாக சிகிச்சை கொடுக்க படுகிறது. ஆகையால் ஒரு முறையான பயிற்சி எடுத்துக்கொண்ட செவிலியரும், மருத்துவரும் தான் இருதய செயல் இழப்பு உள்ளவர்களையும் சாதாரணமாக அடைப்பு மட்டும் உள்ளவர்களையும் கண்டுபிடித்து அதற்க்கு ஏற்றார் போல் அந்த சிகிச்சையில் அழுத்தத்தை கொடுக்க முடியும். மேலும் அந்த சிகிச்சையின் போது நோயாளியினுடைய ரத்த அழுத்தம், ஆக்ஸிஜன் (oxygen) அளவு, (ECG) இவை எல்லாவற்றையும் தொடர்ச்சியாக கண்காணித்து அதில் ஏதாவது மாற்றங்கள் இருக்கிறதா என்பதை பார்ப்பதற்கும் மருத்துவர்களுக்கு பயிற்சி வேண்டும்.